/indian-express-tamil/media/media_files/2025/10/29/photo-1649667221325-d3ce96d456f0-2025-10-29-20-32-58.jpg)
Betel leaf plant care| how to grow betel leaf |organic fertilizer| home gardening tips
/indian-express-tamil/media/media_files/2025/10/29/images-2025-10-29-20-30-55.jpg)
மாடித் தோட்டம் அல்லது தரைத் தோட்டத்தில் வெற்றிலைக் கொடியை நடவு செய்து, அவை செழிப்பாக வளரவில்லையா? வாடிப் போய், இலைகள் சின்னதாக இருக்கிறதா? இந்தக் கொடியை அடர்த்தியாகவும், இலைகளைப் பெரிதாகவும் வளர்க்க சில எளிய நுட்பங்கள் இங்கே!
/indian-express-tamil/media/media_files/2025/10/29/foliage-interior-plants_87720-172070-2025-10-29-20-31-28.jpg)
நிழல் அவசியம்: வாடாமல் காக்க டிப்ஸ்!
வெற்றிலைக் கொடிக்குச் சூரிய ஒளி அவசியம் என்றாலும், அதிகப்படியான நேரடி வெயில் ஆகாது. உங்கள் மாடித் தோட்டத்தில் நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால், வெற்றிலைக் கொடி எளிதில் வாடிவிடும். இதைத் தவிர்க்க, கொடியை நிழல் வலையில் (Shade Net) வைத்து வளர்ப்பது மிகச் சிறந்தது. பால்கனியில் வைத்திருந்தால், காலை வெயில் கிடைக்கும் இடத்தில் மட்டும் வைப்பது போதுமானது.
/indian-express-tamil/media/media_files/2025/10/29/high-angle-view-plant_1048944-1758814-2025-10-29-20-31-50.jpg)
சரியான மண்ணும் ஈரப்பதமும்
வெற்றிலைக் கொடியை நடவு செய்யும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் க்ரோ பேக் (Grow Bag) அல்லது தொட்டியின் அளவு சற்றுப் பெரிதாக இருக்க வேண்டும். இது கொடி வேகமாக வளர்வதற்கும், அதிக இலைகள் வைக்கவும் உதவும். வெற்றிலைக் கொடியின் வளர்ச்சிக்குத் தொட்டியில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். நீர் தேங்காத மண் கலவையைத் தயார் செய்ய வேண்டும். மண்ணில் எப்போதும் லேசான ஈரப்பதம் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/29/preparation-soil-mixture-from-fertile-compost-humus-vermiculite-black-garbage-bag-floor_1048944-6211545-2025-10-29-20-32-06.jpg)
அடர்த்தியாக வளர உர ரகசியம்!
வெற்றிலைக் கொடி வேகமாக வளரவும், நிறைய அடர்த்தியான இலைகளை வைக்கவும் இந்த இரண்டு இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம்:
/indian-express-tamil/media/media_files/2025/10/29/images-1-2025-10-29-20-32-21.jpg)
மண்புழு உரம் (Vermicompost):
செடி நல்ல பச்சையாக (Greenish) இருக்கவும், இலைகள் பெரிதாக வளரவும், மாசத்துக்கு ஒரு முறை ஒரு கைப்பிடி அளவுக்கு மண்புழு உரத்தைப் பயன்படுத்தலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/10/29/delicious-square-crispbread-bottle-milk-marble_114579-58104-2025-10-29-20-32-36.jpg)
புளிச்ச மோர் (Sour Buttermilk):
செடியின் வளர்ச்சி அமோகமாக இருக்கவும், இலைகள் பெரியதாக வளரவும், 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு டம்ளர் புளித்த மோரை நீருடன் கலந்து நீருரமாக்கிக் கொடுக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/29/photo-1649667221325-d3ce96d456f0-2025-10-29-20-32-58.jpg)
இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் வெற்றிலைக் கொடி செழிப்பாகவும், வாடாமலும், பெரிய இலைகளுடனும் வளரும் என்பதில் சந்தேகம் இல்லை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us