/indian-express-tamil/media/media_files/2025/10/12/dengue-fever-dengue-affected-districts-nadu-dengue-alert-dengue-symptoms-2025-10-12-12-32-50.jpg)
Dengue Fever: Dengue affected districts Tamilnadu
/indian-express-tamil/media/media_files/2025/10/12/dengue-zika-chikungunya-fever-mosquito-aedes-aegypti-bitting-human-skin-drinking-blood_17661-397-2025-10-12-12-33-15.jpg)
பருவமழை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 6 முக்கிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அபாய கட்டத்தில் இருப்பதாகப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/jVAPfxvtG8GGIAkJmV0j.jpg)
பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் திரு. சோமசுந்தரம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மழைக்காலம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில், சென்னை, கோவை, கடலூர், தஞ்சாவூர், வேலூர், மற்றும் திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது," என்று தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/10/12/lifestyle-adult-with-health-problems_23-2151098542-2025-10-12-12-35-43.jpg)
ஆபத்து இல்லை... ஆனால் அலட்சியம் கூடாது!
அவர் மேலும் கூறுகையில், "டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டவர்கள் ஒருபோதும் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சமீப காலமாக டெங்குவால் மாநிலத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை," என்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/10/12/images-2025-10-12-12-36-00.jpg)
தயார்நிலையில் சுகாதாரத் துறை!
டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை முழுவீச்சில் தயாராகி உள்ளது. "கொசு உற்பத்தியைத் தடுக்கவும், வளர்ந்த கொசுக்களை அழிக்கவும் தேவையான மருந்துகள், புகை பரப்பும் கருவிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்," என்று சோமசுந்தரம் அறிவுறுத்தினார்.
/indian-express-tamil/media/media_files/2025/10/12/photo-1650182178684-718df4e5ba70-2025-10-12-12-36-26.jpg)
பொதுமக்களின் ஒத்துழைப்பும், சுய மருத்துவத்தைத் தவிர்ப்பதும் டெங்குவை எளிதில் விரட்ட ஒரே வழி என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us