/indian-express-tamil/media/media_files/2025/10/14/dog-facts-2025-10-14-22-43-00.jpg)
Dog super senses Dog science facts Dog vision color
/indian-express-tamil/media/media_files/2025/10/14/lovely-pet-portrait-isolated_23-2149192357-2025-10-14-22-43-51.jpg)
நமது அன்பான தோழனான நாய் சாதாரணமாகத் தெரியலாம், ஆனால் அதன் புலன் உணர்வுகள் நம்மை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. நாய்களின் புத்திசாலித்தனம் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறும் திறன் ஆகியவை குறித்து அறிவியல் கண்டறிந்துள்ள 6 ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் இங்கே:
/indian-express-tamil/media/media_files/2025/10/14/close-up-funny-face-beautiful-dog_23-2148366935-2025-10-14-22-45-10.jpg)
வண்ணங்களைப் பார்க்கும் திறன்:
நாய்கள் கறுப்பு-வெள்ளையில் மட்டுமே பார்க்கின்றன என்பது கட்டுக்கதை. அவை நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களின் சில ஷேட்களைப் பார்க்க முடியும். மேலும், மனிதர்களை விட இரவு நேரத்தில் மிகத் தெளிவாகப் பார்க்கும் ஆற்றல் அவற்றின் கண்களுக்கு உண்டு.
/indian-express-tamil/media/media_files/2025/10/14/close-up-light-colored-puppy-paw-dog-feet-legs-wood-close-up-image-paw-homeless-dog-skin-texture_1391-219-2025-10-14-22-44-56.jpg)
வியர்க்கும் விதம் விநோதம்:
மனிதர்களைப் போல் நாய்கள் உடல் முழுவதும் வியர்ப்பதில்லை. அவை மூச்சு வாங்குவதன் (Panting) மூலம் உடலைக் குளிர்விக்கின்றன. இருப்பினும், அவற்றின் கால் பாதங்களில் (Paw Pads) வியர்வை சுரப்பிகள் உள்ளன. இவை உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதுடன், ஒவ்வொரு நாய்க்கும் தனித்துவமான இயற்கை வாசனையையும் வெளியிடுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/10/14/cute-beagle-portrait_1385-375-2025-10-14-22-46-30.jpg)
அபாரமான மோப்ப சக்தி:
மனிதர்களுக்கு சுமார் 6 மில்லியன் மோப்ப உணர்விகள் இருக்கும் நிலையில், நாய்களுக்கு 300 மில்லியன் மோப்ப உணர்விகள் உள்ளன. இதனால் மிக லேசான வாசனைகளைக் கூட அவற்றால் கண்டறிய முடியும். மற்ற விலங்குகள் தகவல் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தும் ஃபெரோமோன்களைக் (Pheromones) கண்டறியும் தனித்துவமான மூளைப் பகுதியும் அவற்றுக்கு உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/10/14/closeup-shot-nos-hairy-dog_181624-26919-2025-10-14-22-46-42.jpg)
தனித்துவமான மூக்கு ரேகை (Nose Print):
மனிதர்களுக்கு கைரேகை (Fingerprint) இருப்பது போல, ஒவ்வொரு நாய்க்கும் அதன் மூக்கின் மேல் உள்ள கோடுகள் மற்றும் மேடுகள் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளன. இது ஒரு நாயை அடையாளம் காணப் பயன்படும் பிரத்யேக அடையாளமாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/14/close-up-portrait-dog_1048944-9259669-2025-10-14-22-48-30.jpg)
மூன்று இமைகள் கொண்ட கண்கள்:
நாய்களுக்கு மேலே, கீழே என இரண்டு இமைகள் மட்டுமல்லாமல், மூன்றாவது இமை ஒன்றும் உள்ளது. இது 'நிக்டிடேட்டிங் மெம்பரேன்' (Nictitating Membrane) என்று அழைக்கப்படுகிறது. இது கண்களைச் சுத்தப்படுத்தவும், கண்ணீரைச் சீராகப் பரப்பவும், கண் தொற்றுக்களைத் தடுக்கவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/10/14/dog-sitting-near-girl_8353-5282-2025-10-14-22-48-59.jpg)
இந்த உண்மைகள் மூலம், உங்கள் செல்லப் பிராணி வெறும் துணையைத் தாண்டி, ஒரு அதிசய உணர்வுக் களஞ்சியம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.