"பராசக்தி" மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் சிவாஜி. அன்றிலிருந்து நடிப்புலகை ஆட்சி செய்தார். இந்த புகழ்பெற்ற “நடிகர் திலகம்”, தமிழ் திரைப்படத் துறையின் புதையல். 1986-ல் இவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
தமிழ் திரைப்படத் துறையின் மாணிக்கம் என எம்.ஜி.ஆரை சொல்லலாம். 1974-ஆம் ஆண்டு அரிசோனாவின் உலக பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார். கருப்பு-வெள்ளை காலத்திலிருந்து ஒருபோதும் அவர் மவுசு குறையவில்லை. பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
தமிழ் திரைப்படத் துறையின் “கேப்டன்” க்கு புளோரிடாவின் சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்) 2011-ல் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
"அதிசய பிறவி" மற்றும் "காதலர் தினம்" போன்ற படங்களில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்துக்கு முனைவர் பட்டம் உண்டு! நடிப்பு, மிமிக்ரி, நாடகம் மற்றும் சமூக சேவைத் துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி 2013 ஆம் ஆண்டில், சர்வதேச மாற்று மருத்துவ பல்கலைக்கழகத்தால் அவருக்கு மதிப்புமிக்க முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
உலக நாயகன் கமல் ஹாசனுக்கு 2005-ல் சத்திய பாமா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை அளித்தது. கலைத்துறைக்கு அவர் செய்திருக்கும் அர்ப்பணிப்புகள், திரையில் அவர் புகுத்திய முயற்சிகள், நடிப்பு, நடனம், ஆக்ஷன், ரொமான்ஸ், என கமலின் பன்முகத் திறமைக்கு எத்தனை முனைவர் பட்டங்களை வேண்டுமானாலும் தரலாம்.
இந்த திறமையான நடிகர் நாம் பாராட்டும் படி பல பணிகளை செய்துள்ளார். இவரது முயற்சிகளுக்காகவும், தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக அவர் செய்த மகத்தான பணிகளுக்காகவும் வேல்ஸ் பல்கலைக்கழகம், கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
பிரபுவின் படங்கள் பல நினைவு வேடங்களால் நிரம்பியுள்ளது. “சின்னத்தம்பி, அக்னி நட்சத்திரம்” போன்ற பசுமையான பல திரைப்படங்களில் நடித்துள்ள இந்த அற்புதமான நடிகருக்கு சத்தியபாமா பல்கலைக்கழகம் 2011-ல் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
விஜய்யின் அதிரடி சண்டை மற்றும் நடனம் ஒவ்வொரு திரைப்படத்திலும், ரசிகர்களின் இதயத்தை வெல்லும் அவரது ஸ்கிரீன் பிரெசன்ஸ் இப்படி அவரைப்பற்றி சொல்லிக் கொண்ரே போகலாம். அவரது கில்லி திரைப்படம், ரஜினியின் படையப்பா வசூலை முறியடித்த நேரத்தில் விஜய்யின் கடின உழைப்பை பாராட்டி, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
சியான் விக்ரம் ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் தமிழ் நடிகர். 2011-ஆம் ஆண்டில் இத்தாலியின் யுனிவர்சிட்டா போபோலரே டெக்லி ஸ்டுடி மிலானோவால் அவர் இந்த விருதைப் பெற்றார். அவரது தனித்துவமான நடிப்பும், பார்வையாளர்களுக்கு சிறந்ததை வழங்குவதற்கான முனைப்பும் அவரின் தாரக மந்திரங்கள்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக், 2015 ஆம் ஆண்டில் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கலை மூலம் சமூகத்திற்கு செய்த நன்மைக்காக கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார். தனது நகைச்சுவைகளில் சமூக விழிப்புணர்வைச் செயல்படுத்துவது விவேக்கிற்கு கை வந்த கலை. ஒரே நேரத்தில் அவரது நகைச்சுவை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook