/indian-express-tamil/media/media_files/2025/08/22/istockphoto-2148708716-612x612-2025-08-22-17-03-06.jpg)
fixed deposit laddering maximise FD returns fixed deposit investment plan
/indian-express-tamil/media/media_files/mtenOhZ0RELrRjVBJU1p.jpg)
நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் (FD) மூலம் அதிக வட்டி பெற ஆசையா? அதே சமயம், அவசர தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் பணம் கைக்குக் கிடைக்க வேண்டுமா? கைகொடுக்க வருகிறதுதான் இந்த ‘லேடரிங்’ (FD Laddering) உத்தி. இது ஒரு ஸ்மார்ட்டான முதலீட்டு முறை. நீங்கள் ஒரே மொத்த தொகையை ஒரே ஒரு நீண்ட கால எஃப்.டி-யில் போடுவதற்குப் பதிலாக, அதைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு முதிர்வுக் காலங்களைக் கொண்ட (உதாரணமாக 6 மாதம், 1 வருடம், 3 வருடம்) பல FD-களில் முதலீடு செய்வதுதான் லேடரிங்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-1172767690-612x612-1-2025-07-17-22-50-06.jpg)
உங்கள் முதலீட்டுக் கால எல்லையைத் தீர்மானியுங்கள்!
முதலில், உங்கள் நிதி இலக்குகள் என்ன, நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள் (Investment Horizon) என்பதை மதிப்பிடுங்கள். உங்களுக்கு குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுமா (Liquidity)? எதிர்காலச் செலவுகள் என்னென்ன? உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் (Risk Tolerance) என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து, உங்கள் முக்கிய நோக்கம் வருமானம் ஈட்டுவதா, மூலதனத்தைப் பாதுகாப்பதா, அல்லது இரண்டும் சேர்ந்ததா என்பதைத் தெளிவாக முடிவு செய்யுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-1293189251-612x612-2025-07-17-22-50-35.jpg)
பிரித்துப் பிரித்து முதலீடு செய்யுங்கள்!
நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் மொத்தத் தொகையையும் 6 மாதங்கள், 1 வருடம், 3 வருடங்கள் எனப் பல்வேறு முதிர்வு காலங்களைக் கொண்ட FD-களில் பிரித்து முதலீடு செய்யுங்கள். இதுதான் ’லேடரிங் ஆக்குதலின்' அடிப்படை!
/indian-express-tamil/media/media_files/rtpNuxEf8oZNHc6fkfwu.jpg)
முதிர்வு காலங்களைத் தேர்ந்தெடுங்கள்!
உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போகும் வகையில் ஒவ்வொரு ஃபிக்சட் டெபாசிட்க்கும் முதிர்வுக் காலங்களைத் (Maturity Periods) கவனமாகத் தேர்வு செய்யுங்கள். உதாரணமாக, உங்கள் கோடைகாலக் குடும்பப் பயணத்திற்காக ஆறு மாதங்களில் முதிர்ச்சியடையும் ஒரு எஃப்.டி. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் மற்றொரு எஃப்.டி. இவ்வாறு, குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால FD-களின் சமச்சீர் கலவையை உருவாக்கத் திட்டமிடுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/07/17/istockphoto-1443237827-612x612-2025-07-17-22-50-35.jpg)
நிலைத்தன்மையைப் பேணுங்கள்!
உங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களின் முதிர்வுத் தேதிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். ஒரு FD முதிர்ச்சியடையும்போது, அதன் அசல் தொகையையும் (Principal) வட்டியையும் சேர்த்து, நீண்ட முதிர்வுக் காலம் கொண்ட ஒரு புதிய எஃப்.டி-யில் மறு முதலீடு செய்யுங்கள். இதே செயல்முறையை, ஒவ்வொரு ஃபிக்ஸட் டெபாசிட் முதிர்வை நெருங்கும்போதும் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். இந்தச் சுழற்சியைப் பராமரிப்பதன் மூலம், நீங்கள் எப்போதும் அதிக வட்டி விகிதத்தைப் பெறுவதுடன், கையில் பணத் தட்டுப்பாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.