/indian-express-tamil/media/media_files/phIUizRsIvQcJKv3HBFN.jpg)
Magic Tea for Heart health
/indian-express-tamil/media/media_files/OFASWrPhgAmeg0XzklmV.jpg)
இதயம், நரம்புகள், மூட்டுகள் என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த ஒரு எளிய ரகசியம் உங்களுக்காக! இதற்காக நீங்கள் பெரியளவில் மெனக்கெடத் தேவையில்லை. வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் இந்த அற்புத டீயை குடித்தால் போதும் என்று கூறுகிறார் டாக்டர் விவேக் ஜோஷி. இதய ஆரோக்கியம் (healthy heart), ஆரோக்கியமான நரம்புகள் (healthy veins) மற்றும் ஆரோக்கியமான மூட்டுகளை (healthy joints) நீங்கள் விரும்பினால், இந்த எளிய டீ உங்களுக்கு பெரிதும் உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/28/istockphoto-990242644-612x612-2025-09-28-17-15-06.jpg)
இந்த டீயைத் தயாரிப்பது மிகவும் சுலபம். இதற்குத் தேவையான பொருட்களும் மிக எளிமையானவை:
/indian-express-tamil/media/media_files/7QGgtGI7ngUXd5p239E6.jpg)
ஆளி விதை (Flaxseed): ஒரு டீஸ்பூன். (ஆளி விதைகள் சருமத்திற்கும், செரிமானத்திற்கும் ஒரு மாயாஜால பலனைத் தரும்).
/indian-express-tamil/media/media_files/2025/03/01/DyXv2DOYdGPFaxNQSfWS.jpg)
இலவங்கப்பட்டை (Cinnamon): இரண்டு சிட்டிகை.
/indian-express-tamil/media/media_files/PhIU04yPa1qIT8CVVgPN.jpg)
இஞ்சி (Ginger): ஒரு அங்குலத் துண்டு.
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
எலுமிச்சை சாறு (Lemon Juice): ஒரு டீஸ்பூன்.
/indian-express-tamil/media/media_files/2025/09/28/istockphoto-1057978538-612x612-2025-09-28-17-15-06.jpg)
மேஜிக் டீ தயாரிக்கும் முறை:
மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் (ஆளி விதை, இலவங்கப்பட்டை, இஞ்சி) சுமார் 200 மில்லி தண்ணீர் (அதாவது ஒரு கிளாஸ் தண்ணீர்) அல்லது 200 மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை அதிக தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் சூடுபடுத்தவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, தண்ணீர் ஆறும் வரை 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். தண்ணீர் ஓரளவு ஆறிய பிறகு, அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இப்போது உங்கள் ஆரோக்கியமான டீ குடிக்கத் தயார்!
/indian-express-tamil/media/media_files/J56GcH97MNkCT0O3LF2b.jpg)
எப்போது குடிக்க வேண்டும்? - முக்கியக் குறிப்பு!
இந்த டீயை வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் போதும். மிக முக்கியமான விஷயம்: இந்த டீயை வெறும் வயிற்றில் (empty stomach) குடிக்கக் கூடாது. இந்த எளிய ஆயுர்வேத முறையைப் பின்பற்றி, உங்கள் இதயம் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us