/indian-express-tamil/media/media_files/2025/10/29/herbal-hair-dye-at-home-permanent-black-hair-remedies-homemade-hair-dye-without-side-effects-2025-10-29-21-32-29.jpg)
Herbal hair dye at home| permanent black hair remedies| homemade hair dye without side effects
/indian-express-tamil/media/media_files/2025/10/25/young-woman-with-gray-hair-early-gray-hair-concept_150893-3165-2025-10-25-14-26-26.jpg)
இளமையிலேயே நரைமுடி வந்துவிட்டால், அதை மறைக்க டை (Hair Dye) பயன்படுத்துவது பலரின் பழக்கம். ஆனால், கடைகளில் விற்கப்படும் டையால் பக்கவிளைவுகள் வருமோ என்ற பயம் இருக்கிறதா? இதோ, உங்கள் பயத்தைப் போக்கி, வீட்டிலேயே எளிமையாகத் தயாரிக்கக்கூடிய, பக்கவிளைவுகள் இல்லாத ஒரு ஹெர்பல் ஹேர் டை குறித்து சித்த மருத்துவர் டாக்டர். மெல்வின் வழங்கும் குறிப்புகள்!
/indian-express-tamil/media/media_files/2025/10/25/woman-mixing-hair-dye-bowl_23-2149167363-2025-10-25-14-26-42.jpg)
தேவையான பொருட்கள் (Home Made Hair Dye)
இந்த எளிய, இயற்கையான ஹேர் டையைத் தயாரிக்க உங்களுக்குத் தேவையானது இரண்டே பொருட்கள் தான்:
/indian-express-tamil/media/media_files/2025/04/29/GpQvJyZ2YDoBekK2R8Ig.jpg)
ஆமணக்கு எண்ணெய் (Castor Oil) அல்லது தேங்காய் எண்ணெய் (Coconut Oil): இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து 250 ml எடுத்துக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/D3kxaibViK5aNP2pUXxY.jpg)
காபி தூள் (Plain Coffee Powder): சாதாரணமாகச் சிகரிப் பவுடர் (Chicory Powder) கலக்காத, தூய காபி கொட்டை தூளை 100 g வாங்கிக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/09/28/istockphoto-1057978538-612x612-2025-09-28-17-15-06.jpg)
தயாரிப்பு:
எண்ணெய் மற்றும் காபி தூள் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, மிதமான சூட்டில் (Gentle Heat) கொதிக்க விடவும். கொதித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறிய பிறகு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/avNgnM7cgZIyhTOxh1cy.jpg)
பயன்பாடு (இரு முறைகள்):
தலைக்குக் குளிப்பதற்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்க்கவும். பின்பு வாஷ் செய்யலாம். நீங்கள் குளித்து முடித்த பிறகும் கூட, இந்த எண்ணெயை லேசாகத் தலையில் தேய்த்துக் கொண்டு வெளியே செல்லலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/10/25/medium-shot-woman-applying-hair-product_23-2149173130-2025-10-25-14-29-42.jpg)
நிரந்தரக் கருமைக்கு இந்த எண்ணெய் ஏன் சிறந்தது?
இந்த எண்ணெய் கலவையை நீங்கள் தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தி வரும்போது, காபி தூளில் உள்ள சத்துகள் முடியின் வேர்க்கால்களில் உள்ள பிக்மென்ட்டை (Pigment) அழகாக்கி, நரைமுடியின் நிறத்தை நிரந்தரமாகக் கருப்பு நிறமாக மாற்றும். பக்கவிளைவுகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், இளமையின் அடையாளமான கருமையான கூந்தலை மீண்டும் பெற, இந்த இயற்கைத் தீர்வை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us