/indian-express-tamil/media/media_files/2025/10/07/janhvi-kapoor-paris-fashion-week-2025-10-07-14-21-55.jpg)
Janhvi Kapoor
/indian-express-tamil/media/media_files/2025/10/07/janhvi-kapoor-paris-fashion-week-1-2025-10-07-14-19-12.jpg)
பாரிஸ்: பாலிவுட் நட்சத்திரமான ஜான்வி கபூர், பாரிஸ் ஃபேஷன் வாரத்தில் (Paris Fashion Week) தனது ஸ்டைலால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்! புகழ்பெற்ற 'Miu Miu' ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்ட ஜான்வி, தான் மிகவும் ரசிக்கும் அமெரிக்கப் பாப் பாடகி பிரிட்டனி ஸ்பியர்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு அதிரடியான ராக்ஸ்டார் ஸ்டைலில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
/indian-express-tamil/media/media_files/2025/10/07/janhvi-kapoor-paris-fashion-week-2-2025-10-07-14-20-14.jpg)
சகோதரி ரியா கபூர் ஸ்டைலிங் செய்த இந்தத் தோற்றத்தில், ஜான்வி தலை முதல் கால் வரை 'Miu Miu' உடையால் மின்னினார். குட்டையான ப்ளீடெட் ஸ்கர்ட் (Mini Kilt), போலோ ஷர்ட், பிரவுன் லெதர் ஜாக்கெட் மற்றும் அதற்குப் பொருத்தமான ஹேண்ட் பேக் உட வந்து இறங்கினார். குறிப்பாக, பிரிட்டனியின் பிரபலமான பள்ளி சீருடை போன்ற தோற்றத்தை நினைவுபடுத்தும் வகையில், முழங்கால் வரை நீ ஹை சாக்ஸ் (Knee-high socks) மற்றும் ஹீல்ஸ் அணிந்து அவர் கொடுத்த போஸ்கள் வைரலாகி வருகின்றன. இறுக்கிக் கட்டப்பட்ட கொண்டை மற்றும் கூர்மையான கருப்புக் கண்ணாடி ஆகியவை அவரது கெட்டப்புக்கு மேலும் வலு சேர்த்தன.
/indian-express-tamil/media/media_files/2025/10/07/janhvikapoor-2025-10-07-14-20-37.jpg)
பிரிட்டிஷ் வோக் (British Vogue) பத்திரிகையிடம் பேசிய ஜான்வி, "இது பிரிட்டனி ஸ்பியர்ஸுக்கு நான் செலுத்தும் மரியாதை. நான் அவரது மிகப்பெரிய ரசிகை!" என்று கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/10/07/janhvikapoor-2025-10-07-14-20-52.jpg)
விண்டேஜ் உடை அணிந்து அசத்தல்!
Miu Miu ஷோ மட்டுமல்லாமல், பாரிஸ் ஃபேஷன் வீக்-இல் நடந்த மற்றொரு நிகழ்விலும் ஜான்வி கவனம் ஈர்த்தார். புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஜான் காலியானோ (John Galliano) 1986-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய 'ஃபாலன் ஏஞ்சல்ஸ்' (Fallen Angels) என்ற முதல் கலெக்ஷனில் இடம்பெற்ற அரிய ‘சீசர் பிளிட் ஆடை’ ('Scissor-Pleat' dress) ஒன்றை அணிந்து அவர் தோன்றியது ஃபேஷன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
/indian-express-tamil/media/media_files/2025/10/07/janhvi-kapoor-paris-fashion-week-2-2025-10-07-14-20-14.jpg)
பாரிஸ் நகரத்தின் உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடுவது, ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஓய்வெடுப்பது என ஃபேஷன் வாரத்தை அவர் முழுவதுமாக அனுபவித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.