/indian-express-tamil/media/media_files/2025/10/03/karur-vijay-2025-10-03-18-35-57.jpg)
Karur Stampede Vijay campaign bus Justice Senthilkumar
/indian-express-tamil/media/media_files/2025/09/25/chennai-high-court-3-2025-09-25-16-12-22.jpg)
கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3, 2025) கடும் கண்டனம் தெரிவித்தது.
/indian-express-tamil/media/media_files/2025/10/02/vijay-karur-stampede-2025-10-02-13-21-40.jpg)
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/10/03/madras-high-court-rejected-namakkal-district-secretary-sathish-kumar-bail-plea-tamil-news-2025-10-03-14-39-46.jpg)
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தவெக கட்சிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
/indian-express-tamil/media/media_files/2025/09/28/vijay-22-2025-09-28-15-51-09.jpg)
காவல்துறைக்கு நீதிபதியின் கேள்விகள்:
விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?
/indian-express-tamil/media/media_files/2025/09/13/vijay-trichy-campaign-2025-09-13-13-15-23.jpeg)
விஜயின் பரப்புரை வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ உள்ளது. ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத்தவே இல்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? தவெக பரப்புரையால் ஆன சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இந்த தாமதம்? என்று நீதிபதி காவல்துறைக்குக் கேள்வி எழுப்பினார்.
/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-in-2025-09-29-08-20-13.jpg)
தவெக-வுக்கு நீதிபதியின் கண்டனம்:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man-Made Disaster) நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்தவுடன் தவெக-வினர் எல்லோரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏன் கருணை காட்டுகிறீர்கள்? சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது” என்றார் நீதிபதி செந்தில்குமார்.
/indian-express-tamil/media/media_files/2025/09/15/screenshot-2025-09-15-150629-2025-09-15-15-06-52.jpg)
கரூர் துயர சம்பவத்தில் விஜய் பிரசாரம் செய்த பரப்புரை வாகனம் விபத்து ஏற்படுத்திய வீடியோ ஆதாரம் இருந்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து நீதிபதி செந்தில்குமார் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.