/indian-express-tamil/media/media_files/2025/09/15/screenshot-2025-09-15-150629-2025-09-15-15-06-52.jpg)
Karur stampede Vijay rally death TVK campaign postponed TVK meeting suspension
/indian-express-tamil/media/media_files/2025/09/27/karur-death-2025-09-27-20-51-13.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் அவர்கள் கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 27) கரூர், வேலுசாமிபுரத்தில் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசல் காரணமாக, இதுவரை 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் கரூர் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பிற மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்தின் காரணமாக, அடுத்த இரண்டு வாரங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் த.வெ.க. அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/09/29/vijay-rally-stampede-karur-2025-09-29-08-20-13.webp)
கட்சியின் தலைமை நிர்வாகம் தங்கள் அதிகாரபூர்வ X பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
"மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கரூர் சம்பவத்தையடுத்து, அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-in-2025-09-29-08-20-13.jpg)
விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள்
அனுமதிக்கப்பட்ட அளவை மீறிப் பெருந்திரளான மக்கள் திரண்டதால், கட்டுக்கடங்காத நெரிசல் ஏற்பட்டு இந்தத் துயரம் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று முன்தினம் (செப். 29) கைது செய்யப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/09/30/vijay-karur-video-2025-09-30-15-44-59.jpg)
நீதி விசாரணை தொடக்கம்
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம், உயிரிழந்தவர்கள் சிகிச்சை பெற்ற கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகிய இடங்களுக்குச் சென்று நீதிபதி அருணா ஜெகதீசன் நேரடி விசாரணை மேற்கொண்டார். இந்தச் சூழலில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/09/20/vijay-2025-09-20-11-42-05.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.