Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/cocobeans.jpg)
சாக்லேட்டின் ரகசியம் : புகைப்படத் தொகுப்பு
நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த சாப்பாட்டு பட்டியலில் நிச்சயமாக சாக்லேட்டும் இணைந்திருக்கும். ஐஸ்க்ரீம், கேக் என்று ஆரம்பித்து, டார்க் சாக்லெட், சாக்லெட் மில்க் ஷேக் என்று நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கிறது சாக்லேட். (Express Photo by Nithya Pandian, Coimbatore) கொக்கோ என்பது மல்வாசியா குடும்பத்தை சேர்ந்த பசுமைமாறா மர வகைகளில் ஒன்றாகும். (Express Photo by Nithya Pandian, Coimbatore) பொள்ளாச்சியில் தென்னைக்கு அடுத்தபடியாக அநேக விவசாயிகளால் பயிரிடப்படும் ஒரு மரவகை இது. (Express Photo by Nithya Pandian, Coimbatore) நாம் பெரும்பாலும் சாக்லேட்டாகவே இதனை பார்த்திருப்போம். ஆனால் கொக்கோ மரத்தில் இருந்து சாக்லேட் எத்தனை பறிமாற்றம் அடைகிறது என்பது நமக்கு தெரியாது. அதனை அறிந்து கொள்ளவே இந்த புகைப்படத் தொகுப்பு. (Express Photo by Nithya Pandian, Coimbatore) மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளின் அடிவாரத்தில் பொள்ளாச்சி அமைந்திருப்பதால், இங்கிருக்கும் காலநிலைக்கு ஏற்றவாறு கொக்கோ மரங்கள் சிறப்பாக வளர்ந்து வருகிறது ((Express Photo by Nithya Pandian, Coimbatore) மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் இறுதி வரை இங்கு கொக்கோ சீசன். தாத்தூர் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கொக்கோ பண்ணையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. (Express Photo by Nithya Pandian, Coimbatore) கொக்கோ பழத்தில் இருந்து, கொக்கோ பீன்ஸ்கள் பெறப்பட்டு, காயவைக்கப்பட்டுகிறது. பின்னர் அவை கேட்பரி போன்ற தனியார் நிறுவனத்தினரால் கொள்முதல் செய்யப்பட்டு சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. (Express Photo by Nithya Pandian, Coimbatore) இந்த பீன்ஸில் இருந்து தான் நாம் விரும்பும் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது (Express Photo by Nithya Pandian, Coimbatore)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.