/indian-express-tamil/media/media_files/2025/10/09/whatsapp-scam-2025-10-09-17-20-21.jpg)
WhatsApp screen sharing scam Bank account fraud Remote access scam UPI PIN theft
/indian-express-tamil/media/media_files/2025/08/05/istockphoto-1387373490-612x612-2025-08-05-10-19-23.jpg)
வாட்ஸ்அப்பில் புதிய வகை மோசடி ஒன்று அதிவேகமாகப் பரவி வருகிறது. மோசடி கும்பல் வங்கி அதிகாரி போலவோ, வாடிக்கையாளர் சேவை நிர்வாகி போலவோ வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புகிறது. உங்கள் வங்கிக் கணக்கில் பிரச்னை இருப்பதாகக் கூறி, அதைச் சரிசெய்வது போல் நடித்து, உங்கள் போன் ஸ்க்ரீன் ஷேர் செய்யும்படி (Screen Sharing) ஏமாற்றுவார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/10/09/whats-app-screen-2025-10-09-17-22-28.jpg)
ஸ்க்ரீன் ஷேர் தொடங்கியவுடன், உங்கள் போனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் (பேங்கிங் ஆப் திறப்பது, பாஸ்வேர்டு டைப் செய்வது, OTP படிப்பது) உடனுக்குடன் மோசடி செய்பவருக்குத் தெரியும். இதன்மூலம் உங்கள் UPI PIN, வங்கிக் கணக்கு விவரங்கள், தனிப்பட்ட மெசேஜ்கள் என எல்லாவற்றையும் திருடி, உங்கள் கணக்கைக் காலி செய்துவிடுவார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/05/09/0O1EBCxpHd1bICUBaVQB.jpg)
மறைமுக ஆபத்து:
சில சமயங்களில், உங்கள் விவரங்களைத் திருட, உங்களை ரிமோட் ஆக்சஸ் (Remote-Access) ஆப்ஸ்கள் அல்லது உங்கள் கீஸ்ட்ரோக்குகளைப் (Key-logging) பதிவு செய்யக்கூடிய ரகசிய ஆப்ஸ்களைப் பதிவிறக்கம் சொல்வார்கள். இது பின்னணியில் உங்கள் தகவல்களைத் திருடிக்கொண்டே இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/10/05/man-woman-being-addicted-their-phones-even-work_23-2149017718-2025-10-05-21-42-20.jpg)
மக்களே ஜாக்கிரதை! தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு உங்கள் ஸ்கிரீன் –ஐ பகிராதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் யாராவது சொன்னார்கள் என்பதற்காக ரிமோட் அக்சஸ் ஆப்ஸ்களைப் பதிவிறக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான எண்களை உடனே பிளாக் செய்து, சைபர் கிரைமில் புகாரளிக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us