20 வருடம் ஆச்சு... விண்ணில் விதைக்கப்பட்ட கல்பனா சாவ்லா: அன்று நடந்தது என்ன? | Indian Express Tamil

20 வருடம் ஆச்சு… விண்ணில் விதைக்கப்பட்ட கல்பனா சாவ்லா: அன்று நடந்தது என்ன?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விண்வெளிக்கு தனது இரண்டாவது பயணத்தில் இருந்தபோது, ​​பேரழிவு ஏற்பட்டு 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். என்ன நடந்தது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

20 வருடம் ஆச்சு… விண்ணில் விதைக்கப்பட்ட கல்பனா சாவ்லா: அன்று நடந்தது என்ன?

அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த 7 விண்வெளி வீரர்கள் 15 நாட்கள் விண்வெளி பயணம் சென்றனர். பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் (zero gravity) தங்கி பணிபுரிந்து வந்தனர். 15 நாட்களுக்குப் பிறகு பணி முடிந்து பூமிக்கு திரும்ப குழு ஆயத்தமானது. பிப்ரவரி 1, 2003 அன்று கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் விண்கலத்தை பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறங்குவதை விஞ்ஞானிகள் உறுதி செய்து கொண்டிருந்தனர்.

நாசாவின் என்டரி விமான இயக்குனர் லெராய் கெய்ன், STS-107 விண்கலம் பூமிக்குள் நுழைவதற்கான சிக்னலைக் கொடுத்தார். விண்கலத்தில் இந்தியாவின் கல்பனா சாவ்லா உள்பட 7 ஏழு நபர்கள் இருந்தனர். அடுத்து என்ன நடந்தது என்பது அமெரிக்க விண்வெளி மையம் மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விண்வெளி வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக மாறியது. மக்கள் வானத்தில் தீப்பிழம்புகள் மற்றும் தீப்பொறிகளைக் கண்டனர். கொலம்பியா நகரம் தொலைந்து போனது. 7 விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் போது உயிரிந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?

ரீஎன்ட்ரி செயல்முறை தொடங்கியது. டெலிமெட்ரி கூறுகையில், ஹைட்ராலிக் திரவ வெப்பநிலை அளவு குறைந்தது. ஆனால் மற்ற ஹைட்ராலிக் அமைப்பு அறிகுறிகளும் நன்றாக இருந்தது. தவறை விளக்கக்கூடிய எதுவும் கண்டறியவில்லை என்றும் டெலிமெட்ரி சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து, விண்கலத்தின் இடது பக்கத்தில் திடீரென டயர் அழுத்தத்தில் இழப்பு ஏற்பட்டது. அதாவது சரியான டயர் அழுத்தம் இல்லாமல் ஷட்டில் தரையிறங்க முடியாது.

விபத்து குறித்து விண்வெளி பாதுகாப்பு இதழ் கூறுகையில். தரையிறங்கும் வேளையில் விண்கலத்தின் சென்சார்கள் ஒவ்வொரு நொடியும் செயலிழக்கத் தொடங்கின. பின்னர் விண்கலம் அனைத்து தகவல்தொடர்புகளையும் இழந்தது. ஹூஸ்டன் ரேடார் மூலம் தகவல்தொடர்பை மீட்டெடுக்கும் முயற்சி தோல்வியடைந்தது மற்றும் விண்கலத்தைக் கண்டறியத் தவறியது. பேரழிவு தாக்கியது. டெக்சாஸில் வானத்தில் மக்கள் தீப்பிழம்புகளை கண்டதாக வந்த செய்திகள் விண்வெளி குழுவினரை பேரச்சத்தில் ஆழ்த்தியது. கொலம்பியா பயணத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விசாரணையில் தெரியவந்தது என்ன?

கொலம்பியா பேரழிவைத் தொடர்ந்து, விண்வெளித் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு மூடப்பட்டது மற்றும் தீவிரமான விசாரணை தொடங்கப்பட்டது. ஜனவரி 16-ம் தேதி விண்கலம் புறப்பட்டபோதே அதன் ஆபத்தை வெளிப்படுத்தியதாக விசாரணை வாரியம் வெளிப்படுத்தியது. விண்கலத்தின் வெளிப்புற டேங்கில் பெரிய அளவிளான நுரை உருவானது. அது விண்கலத்தின் இறக்கை பகுதியை அடைந்து அதை உடைத்தது.

கேப் கனாவரலில் இருந்து விண்கலம் ஏவப்பட்ட 82 வினாடிகளுக்குப் பிறகு நுரைத் துண்டு விழுந்தது. பின்னர் விண்கலத்தின் இறக்கையைத் தாக்கியது. இந்த நுரை மெது மெதுவாக விண்கலத்திற்குள் நுழைந்தது. இதுவே சென்சார் சிக்னல்களை இழக்க வழிவகுத்து இறுதி பணியை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விண்கலம் ஒலியை விட 18 மடங்கு வேகத்தில் பயணித்து, பூமியில் இருந்து 61,170 மீட்டர் உயரத்தில் இருந்தபோது, ​​உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சிகளில் ஹரியானாவில் உள்ள கர்னால் மற்றும் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் சொந்த ஊர் உட்பட அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்துப் கொண்டிருந்த நேரத்தில் விண்கலம் தீப்பிடித்து வெடித்தது. இந்த நிகழ்வு விண்வெளி வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: 20 years of columbia disaster what happened during kalpana chawlas flight to space