Advertisment

உலக நாடுகளை அச்சுறுத்திய சீனா ராக்கெட் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது

Chinese Rocket Debris Fall In The Pacific : சீனாவின் முறையான திட்டமிடாத செயலால் 23 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பாகங்கள் எங்கு வேண்டுமானாலும் விழும் ஆபத்து உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்த நிலையில், தற்போது அது பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

author-image
sangavi ramasamy
New Update
அண்டார்டிகாவில் செயற்கைக் கோள் கண்காணிப்பு நிலையத்தை உருவாக்கும் சீனா

சீனா விண்வெளியில் சொந்தமாக 'டியான்காங்' எனப் பெயரிடப்பட்ட விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்காக 3 தொகுப்புகளாக ஆய்வக தொகுப்பு அதாவது பொருட்கள் ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தவகையில் 3-வது மற்றும் கடைசி ஆய்வக தொகுப்பு மெங்டியன்
லாங் மார்க் -5பி (Long March 5B) ராக்கெட் மூலம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. லாங் மார்க் -5பி ராக்கெட் 108 அடி நீளம், 23 டன் எடை கொண்டது.

Advertisment

மெங்டியன் (Mengtian) தொகுப்பு வெற்றிகரமாக அனுப்பபட்டு புவி வட்டபாதையில் நுழைத்தது என சீனா அறிவித்தது. இந்தநிலையில் பூமிக்கு மீண்டும் ராக்கெட் எங்கு விழும் என சீனா உறுதி செய்யவில்லை. பொதுவாக, விண்ணுக்கு அனுப்பபடும் ராக்கெட்கள், விண்கலத்தை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்திவிட்டு, ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும். திட்டக்குழு அவ்வாறு வடிவமைத்து அனுப்புவர். ராக்கெட் பாகங்கள் பெரும்பாலும் கடல் பகுதியில் விழும்படி திட்டமிட்டு அனுப்பபடும். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும்.

ஆனால் சீனா அனுப்பிய ராக்கெட் முறையான திட்டமிடாத காரணத்தால் அதன் பாகங்கள் மற்றும் குப்பைகள் எங்கு விழும் எனக் கூறப்படவில்லை. இதுகுறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

விண்வெளி கழகத்தின் தலைமை பொறியியலாளர் அலுவலகத்தின் ஆலோசகர் டெட் மியூல்ஹாப்ட் கூறுகையில், "சீனா மீண்டும் இதுபோன்று செயல்படுகிறது. இதனால், 88% உலக மக்களின் வாழ்க்கை பேராபத்தில் உள்ளது. 7 பில்லியன் மக்கள் ஆபத்தில் உள்ளனர் என்று கூறினார். இது பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உற்று கவனத்து வந்தனர். கட்டுப்பாட்டை இழந்து விழும்" என தெரிவித்தனர்.

இந்தநிலையில், சீனாவின் லாங் மார்க் -5பி பசிபிக் பெருங்கடலில் நேற்று விழுந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. யு.எஸ்.ஸ்பேஸ் கம்மெண்ட் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சீனாவின் லாங் மார்க் -5பி வளிமண்டலத்தில் நுழைந்து தெற்கு-மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் நேற்று (நவம்பர் 4) அதிகாலை 4.01 மணியளவில் விழுந்ததாக குறிப்பிட்டுள்ளது.

சீனா முன்பே 3 முறை இவ்வாறு செய்துள்ளது. அமெரிக்கா உள்பட உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த போதிலும் மீண்டும் திட்டமிடாத செயலை சீனா செய்துள்ளது. சீனா ராக்கெட்டின் பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் முன்பு
கண்டெடுக்கப்பட்டன.

சீனாவின் லாங் மார்க் -5பி அச்சுறுத்தல் காரணமாக ஸ்பெயின் நாட்டின் விமான நிலையங்கள் மூடப்பட்டன. விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. லாங் மார்க் -5பி ராக்கெட் தோராயமாக 10 மாடி கட்டடத்தின் உயரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

China Science Rocket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment