Advertisment

தமிழகத்தில் இருவாச்சி திருவிழா; விழிப்புணர்வு ஏற்படுத்த ஆனைமலை காப்பகம் புது முயற்சி

கேரளா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவையாக உள்ளது இருவாச்சிப் பறவை. நீளமான மஞ்சள் அலகுகளுக்காகவும், இறைச்சிக்காகவும் அளவுக்கு அதிகமாக வேட்டையாடப்பட்டு வருகிறது இந்த பறவை. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த பறவைகளை அதிகமாக காண இயலும்

author-image
Nithya Pandian
New Update
Anamalai Tiger Reserve, Hornbill festival

the great Indian hornbill festival : கேரளா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவையாக உள்ளது இருவாச்சிப் பறவை. நீளமான மஞ்சள் அலகுகளுக்காகவும், இறைச்சிக்காகவும் அளவுக்கு அதிகமாக வேட்டையாடப்பட்டு வருகிறது இந்த பறவை. இந்த பறவையின் தேவையை, இந்திய மழைக்காடுகளில் இந்த பறவையின் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் இருவாச்சி திருவிழா ஒன்றை அறிவித்துள்ளனர். இந்த மாதத்தின் துவக்கம் முதல் மாதத்தின் இறுதி நாள் வரை இருவாச்சி பறவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறனர். வருகின்ற 13ம் தேதி அன்று இருவாச்சி திருவிழா நடத்தப்பட உள்ளது.

Advertisment

இதில் பங்கேற்கும் நபர்களுக்கு இருவாச்சி பறவை குறித்த தகவல்களையும், இருவாச்சி பறவையை நேரில் பார்க்க ஒரு வாய்ப்பினையும் சுற்றுலா வரும் நபர்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வனத்துறை.

டி23 ஆப்ரேஷன்: புலியை உயிருடன் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ரியல் ஹீரோக்கள்

நிகழ்ச்சி நிரல் கீழே

publive-image

இது தொடர்பாக வனத்துறை வட்டாரங்களிடம் பேசிய போது, சுற்றுலாவிற்காக வருகின்ற நபர்கள் நேரடியாக வால்பாறை செல்கிறார்கள், சில அருவிகளுக்கு செல்கிறார்கள். ஆனால் இங்கு கொண்டு வரப்பட்டுள்ள எக்கோ டூரிசம் குறித்தும், வனவியல் குறித்தும், உலகின் வேறெந்த பகுதிகளிலும் இல்லாத வன உயிரினங்களின் இயற்கை வாழிடங்கள் குறித்தும், நீலகிரி வரையாடு குறித்தும் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வெற்றி அடையும் போது இது போன்று மேலும் பல விலங்குகள் பறவைகள் குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்கும் பல திட்டங்களை உருவாக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்கள்.

இந்தியாவில் ஹார்ன்பில்கள்

காடுகளின் விவசாயி என்று அழைக்கப்படும் தி கிரேட் இந்தியன் ஹார்ன்பில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிக அளவில் காண முடியும். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நைஷி இனத்தினரின் கலாச்சார அடையாளமாக உள்ளது இருவாச்சி. அதே போன்று நாகர்களின் புனித பறவையாக கருதப்படும் இருவாச்சிக்கு நாகலாந்தில் திருவிழாக்கள் எடுக்கப்படுவது வழக்கம். தமிழக மற்றும் கேரளா எல்லைப் பகுதி மாவட்டங்களில் வசிக்கும் மக்களால் இருவாச்சி என்றும் வேழாம்பல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 9 வகையான ஹார்ன்பில்கள் உள்ளன.

தி கிரேட் இந்தியன் ஹார்ன்பில்கள்

(இருவாச்சி) தான் இந்தியாவில் அதிகமாக காணப்படும் ஹார்ன்பில் பறவை இனமாகும். மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் இமயமலைத் தொடர்களில் இந்த பறவைகளை காண இயலும்.

நார்கோண்டம் ஹார்ன்பில் (Narcondam Hornbill)

இந்தியாவின் அந்தமான் தீவுகளில் உள்ள நார்கோண்டம் பகுதிகைல் மட்டுமே இதனை பார்க்க இயலும்.

ஆஸ்டன்ஸ் ப்ரவுன் ஹார்ன்பில் (Austen’s Brown Hornbill)

வடகிழக்கு இந்தியாவில் உள்ள காடுகளில் வசிக்கும் இந்த பறவையை நாம் அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள நம்தாபா தேசிய பூங்காவில் அதிகமாக காண இயலும்.

Rufous-necked Hornbill

வடகிழக்கு இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் உள்ள காடுகளில் துவங்கி மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் வரை இந்த பறவையை காண இயலும்.

மலபார் பைய்ட் ஹார்ன்பில் (Malabar Pied Hornbill)

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பசுமை மாறாக் காடுகளிலும் புதர்காடுகளிலும் இந்த பறவையை காண இயலும்.

மலபார் க்ரே ஹார்ன்பில் (Malabar Grey Hornbill)

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இந்த பறவைகளை காண முடியும்

Wreathed Hornbill வகை ஹார்ன்பில்களை வடகிழக்கு இந்திய காடுகளில் காண இயலும்

Oriental Pied Hornbill

ஓரிண்டல் பைய்ட் ஹார்ன்பில்களை நாம் மழைக்காடுகள் மற்றும் கீழ்நிலைக் காடுகளில் காண இயலும்.

Indian Grey Hornbill

இந்தியன் க்ரே ஹார்ன்பில்களை தெற்கு இமயமலைத் தொடர்களின் அடிவாரங்களில் அதிகமாக காணமுடியும்.

இந்த பறவைகளில் 6 இனங்கள் அழியும் அபாயத்தை எதிர்க் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment