எலான் மஸ்க் உடன் போட்டி.. ஏரியன் 6 ராக்கெட்டை 2023-இல் விண்ணுக்கு அனுப்பும் ஐரோப்பா | Indian Express Tamil

எலான் மஸ்க் உடன் போட்டி.. ஏரியன் 6 ராக்கெட்டை 2023-இல் விண்ணுக்கு அனுப்பும் ஐரோப்பா

ஐரோப்பாவின் ஏரியன்ஸ்பேஸ் தனது முதல் ஏரியன் 6 ராக்கெட்டை 2023-ம் ஆண்டு விண்வெளிக்கு செலுத்த திட்டமிட்டுள்ளது.

எலான் மஸ்க் உடன் போட்டி.. ஏரியன் 6 ராக்கெட்டை 2023-இல் விண்ணுக்கு அனுப்பும் ஐரோப்பா

ஐரோப்பாவின் ஏரியன்ஸ்பேஸ் (Arianespace) தனது முதல் ஏரியன் 6 ராக்கெட்டை 2023-ம் ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது ஆண்டுக்கு ஒன்பது முதல் 11 வரையிலான முழு விகிதத்தை அதிகரிக்க 2026 வரை ஆகும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

ஐரோப்பாவின் ஏரியன்ஸ்பேஸ் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுக்குப் போட்டியாக உள்ளது. இது சஃப்ரான் மற்றும் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். ஏரியன் 6 திட்டத்தில் 29 கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது. அதில் 18 அமேசான்.காம் நிறுவனத்தின் பிராட்பேண்ட் இணைய பயன்பாட்டிற்காக ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

அமேசான் ஏரியன் 6 பிளாக் II, இன் வாடிக்கையாளராக இருக்கும், இது ராக்கெட்டின் மிகவும் சக்திவாய்ந்த பதிப்பாகும். இது அடுத்த வாரம் நடைபெறும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அமைச்சர்கள் கூட்டத்தில் நிதி உதவி பெற அனுமதிக்கப்படும் என்று ஏரியன்ஸ்பேஸ் தலைமை நிர்வாகி ஸ்டீபன் இஸ்ரேல் தெரிவித்தார்.

ஏரியன் 6 ராக்கெட் 4 பில்லியன் யூரோக்களுக்கும் குறைவான செலவில் (4.15 பில்லியன் டாலர்) உருவாக்கப்பட்டது. முதலில் ஜூலை 2020-ம் ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் வடிவமைப்பு மேம்பாடுகள், தொழில்நுட்ப சிக்கல்கள், கொரோனா தொற்று காரணமாக ஏரியன் 6 திட்டம் தாமதம் ஏற்பட்டது.

“ஏரியன்ஸ்பேஸ் 2024-ம் ஆண்டு 4 முதல் 5 ஏரியன் 6 ஏவுதல்களுக்கு திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு ஏரியன் 6 ராக்கெட் மூலம் 8 செயற்கைகோள்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2026-ம் ஆண்டில் ஆண்டுதோறும் 8 முதல் 11 வரை என முழு திட்ட விகிதத்தை அடையும்” என ஸ்டீபன் தெரிவித்தார். இருப்பினும் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தில் உந்துதல் மூலம் இயக்கப்படும் 6 பில்லியன் யூரோ செயற்கைக்கோள் இணைய அமைப்பு தொடர்பாக ஒப்பந்தம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Arianespace to ramp up to full ariane 6 rocket launch rate in 2026 ceo