ஆர்ட்டெமிஸ் 2 நிலவு திட்டத்தில் 1 பெண் வீராங்கனை உள்பட 3 வீரர்கள் குழு பட்டியலை நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிறுவனம் நேற்று (ஏப்ரல் 3) வெளிளிட்டது. இக்குழுவில் நாசாவைச் சேர்ந்த 3 நபர்கள், கனேடியன் விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற்றுள்ளனர். நாசா வீரர்கள் மிஷன் கமாண்டர் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், நாசா மிஷன் நிபுணர் கிறிஸ்டினா கோச் மற்றும் கனேடியன் விண்வெளி நிறுவன வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அப்பல்லோ திட்டத்திற்கு பின் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒருபகுதியாக ஆர்ட்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. இந்நிலையில் அடுத்த முயற்சியாக ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கு நாசா தயாராகி வருகிறது. ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவு சுற்றுப் பாதைக்கு சென்று திரும்புவர். ஆர்ட்டெமிஸ் 2 திட்டம் ஆர்ட்டெமிஸ் மிஷனின் முதல் crewed mission ஆகும்.
ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் SLS, விண்வெளி ஏவுதல் ராக்கெட் மூலம் ஆளில்லா ஓரியன் விண்கலம் அனுப்பபட்டது. ஆர்ட்டெமிஸ் 2, 10 நாட்கள் பயணத் திட்டத்தில் 4 விண்வெளி வீரர்கள் நிலவைத் சுற்றி பறந்து, ஓரியன் விண்கலத்தின் பாதுகாப்பு தரம் குறித்து ஆய்வு செய்து, மனிதர்கள் நிலவில் நீண்ட நாள் தங்கி ஆய்வு செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதா என்பதையும் சோதனை செய்ய உள்ளனர்.
ஓரியன் விண்கலத்தில் பூமியில் இருந்து 10,300 கிலோமீட்டர் பயணிக்கும் ஆர்ட்டெமிஸ் 2 குழுவினர் நிலவு சுற்றுப்பாதையில் இருந்து சந்திரனையும், நம் பூமியையும் பார்க்க முடியும்.
4 பேர் அடங்கிய குழு
ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் நாசாவின் ரீட் வைஸ்மேன் ஆர்ட்டெமிஸ் 2 பணியின் தளபதியாக செயல்படுவார். விக்டர் குளோவர் பைலட்டாக பணியாற்றுவார். ஓரியன் விண்கலத்தை நிலவு சுற்றுப் பாதைக்கு வழிசெலுத்துவார். கனேடியன் விண்வெளி ஏஜென்சியைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் இந்ததிட்டத்தில் ஒருவராக பணியாற்றுவார். இவர் போர் விமானியாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். நாசாவுடன் இணைந்து பயிற்சி பெற்று முதல் முறையாக விண்வெளிக்கு செல்கிறார். கிறிஸ்டினா கோச், இத்திட்டத்தின் முதல் பெண் உறுப்பினராவார். அனுபவம் வாய்ந்த கோச், ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் மிஷன் நிபுணராக செயல்படவுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“