நவம்பர் 16-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் பணிகளை முடித்து கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி நேற்று வியாழக்கிழமை
பூமிக்குத் திரும்பத் தொடங்கியது. இந்த விண்கலம் நவம்பர் 25 முதல் சந்திரனைச் சுற்றி ஆய்வு செய்தது.
நாசாவின் விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட் மூலம் ஆளில்லா ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் 16-ம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்தநிலையில் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திருப்ப நாசா ஏற்பாடுகளை செய்து வருகிறது. விண்கலம் மூலம் கூடுதல் தரவுகளை திரட்ட உள்ளது.
ஓரியன் விண்கலம் டிசம்பர் 11-ம் தேதி கடலில் விழுகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி வெற்றியடையும் நிலையில், 2024-ம் ஆண்டு நாசா விஞ்ஞானிகளில் ஒரு குழுவினர் ஆர்ட்டெமிஸ் II மூலம் நிலவுக்கு சென்று வருவர். அதைத் தொடர்ந்து ஒரு பெண் விஞ்ஞானி உள்பட விண்வெளி வீரர்கள் ஆர்ட்டெமிஸ் III மூலம் நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என நாசா தெரிவித்தது. ஓரியன் விண்கலம் கடலில் தரையிறங்கும் போது அதன் ஆயுளைச் சோதிப்பது மிக முக்கிய நோக்கமாகும். பூமியின் வளிமண்டலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 24,500 மைல் (39,400 கிமீ) வேகத்தில் நுழையும். இது விண்வெளி நிலையத்தில் விண்கலம் நுழைந்ததை விட அதிக வேகம் ஆகும்.
விண்கலம் 10 மினியேட்டரைஸ் செய்யப்பட்ட அறிவியல் செயற்கைக்கோள்களை (Miniaturized science satellites) வெளியிட உள்ளது. இவை சந்திரனின் தென் துருவத்தில் பனி படிவுகளின் வரையறைகளை கண்டறிய பயன்படுத்தப்படும். மேலும், இந்த பகுதியில் தான் வரும் காலத்தில் ஆர்ட்டெமிஸ் விண்வெளி வீரர்களை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று வார ஆர்ட்டெமிஸ் I பணி, 25 நாட்கள் ஓரியன் பயணம் சந்திரனின் மேற்பரப்பின் 97 கி.மீ சென்று சந்திரனுக்கு அப்பால் சுமார் 64,400 கிமீ தூரம் பறந்து நேற்று பூமிக்கு திரும்பி தொடங்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil