இந்தியா, அமெரிக்கா உள்பட உலக நாடுகள் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். புது புது கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றனர். அந்தவகையில்,
பூமிக்கு மிக அருகில் கருந்துளை (Black hole) ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளி ஆய்வில் கருந்துளை எப்போதும் புதிதான ஒன்றாகவே உள்ளது. சூரியன் நிறையைக் காட்டிலும் 100 மடங்கு அதிக நிறை கொண்ட 100 மில்லியன் கருந்துளைகள் பால்வீதியில் ( Milky Way) இருக்க கூடும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்புகள் ராயல் அஸ்டிரோனாமிக்கல் சோசைட்டி (Royal Astronomical Society) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளை பூமிக்கு மிக அருகில் உள்ளது. சூரியனை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. பூமியிலிருந்து 1600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கருந்துளையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் தேசிய விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜெமினி சர்வதேச கண்காணிப்பகத்திலிருந்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு கருந்துளை கண்டுபிடித்துள்ளனர். முதலில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கியா விண்கலத்தின் தரவை கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் அது கருந்துளையை ஹோஸ்ட் செய்யும் திறன் கொண்டது என கண்டறிந்தனர்.
பின்னர், ஜெமினி மல்டி-ஆப்ஜெக்ட் ஸ்பெக்ட்ரோகிராஃப் கருவி பயன்படுத்தி ஆய்வு செய்ததில் அது கருந்துளை என்றும் சூரியனை விட 10 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாக கூறினர்.
தற்போதைய கண்டுபிடிப்பு முந்தைய கண்டுபிடிப்புகளை விடவும் 3 மடங்கு அருகில் இந்த கருந்துளை இருப்பதாக வாஷிங்டன் தேசிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளனது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil