போயிங் 747 விமானம் மூலம் ராக்கெட் ஏவுதல்.. இங்கிலாந்தின் திட்டம் தோல்வி | Indian Express Tamil

போயிங் 747 விமானம் மூலம் ராக்கெட் ஏவுதல்.. இங்கிலாந்தின் திட்டம் தோல்வி

விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்ட போயிங் 747விமானம் மூலம் ராக்கெட் ஏவுதல் திட்டத்தை செயல்படுத்த இருந்த நிலையில் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

போயிங் 747 விமானம் மூலம் ராக்கெட் ஏவுதல்.. இங்கிலாந்தின் திட்டம் தோல்வி

விண்ணில் செயற்கைக்கோள்களை செலுத்தும் முதல் ஐரோப்பிய நாடாக மாறுவதற்கான இங்கிலாந்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது. செவ்வாய்கிழமை அதிகாலை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் திட்டம் தோல்வியில் முடிந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் விண்வெளி நிலையத்தில் இருந்து 9 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

The “horizontal launch” மூலம் ஏவப்பட இருந்தது. அதன் படி விமானம் இங்கிலாந்தில் உள்ள நியூகுவே கடற்பகுதிக்கு புறப்பட்டது. லாஞ்சர்ஒன் ராக்கெட் “காஸ்மிக் கேர்ள்” என்று அழைக்கப்படும் மாற்றியமைக்கப்பட்ட போயிங் 747 விமானத்தின் இறக்கையின் கீழ் வைக்கப்பட்டது. விமானம் ராக்கெட்டை அட்லாண்டிக் பெருங்கடலில் வெளியிட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட பாதிப்பு காரணமாக செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையை அடையவில்லை. இது குறித்தான தகவல்களை திரட்டி வருகிறோம் என விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா நாடுகள் அமெரிக்காவைச் சாராத சொந்த ஏவுதலுக்கு முயற்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது, ஆனால் இதுவும் தோல்வியடைந்தது. ஐரோப்பா கடந்த ஆண்டில் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்தது. ரஷ்யா-உக்ரைன் போரால் மேலும் பாதிப்படைந்தது.

பிரித்தானிய கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனின் பகுதிக்குச் சொந்தமான விர்ஜின் ஆர்பிட், ஒன்பது சிறிய செயற்கைக்கோள்களை அதன் அமெரிக்க தளத்திற்கு வெளியே அதன் முதல் பயணத்தில் கீழ் பூமியின் சுற்றுப்பாதையில் (LEO) நிலைநிறுத்த திட்டமிட்டது.

விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் தனது ட்விட்டரில் லாஞ்சர்ஒன் விண்கலம் புவி சுற்றுப்பாதையை அடைந்ததாக பதிவிட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே இந்த பதிவை நீக்கிவிட்டது. ” திட்டம் தொடர்பாக அரசாங்கம் மற்றும் விர்ஜின் ஆர்பிட் உள்பட பல்வேறு அமைப்புகளிடம் விசாரணை நடத்தப்படும்” என இங்கிலாந்து விண்வெளி ஏஜென்சின் வணிகத் துறை இயக்குநர் மாட் ஆர்ச்சர் கூறினார்.

ராக்கெட்டை தாங்கி விமானம் விண்ணில் பறந்தவுடன் அங்கு கூடியிருந்த மக்கள் கைகளை தட்டி உற்சாகமடைந்தனர். ஆனால் திட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் அமைதியாக அங்கிருந்து புறப்பட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Britains groundbreaking satellite launch ends in failure