இந்தியாவின் நிலவு பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், சந்திரயான்-3 விண்கலத்தில் மேற்கொண்ட EMI/EMC சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. பெங்களூருவில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் EMI/EMC (Electro - Magnetic Interference/ Electro-Magnetic Compatibility) எனப்படும் சோதனை ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.
EMI-EMC சோதனை என்றால் என்ன?
EMI-EMC சோதனையானது, விண்வெளி சூழலில் செயற்கைக்கோள் துணை அமைப்புகளின் செயல்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் மின்காந்த நிலைகளுடன் அவற்றின் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
இந்தச் சோதனையானது செயற்கைக்கோள்களை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என்று இஸ்ரோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 இன்டர்பிளானட்டரி மிஷன் மூன்று முக்கிய தொகுதிகளைக் கொண்டுள்ளது: the Propulsion module , லேண்டர் தொகுதி மற்றும் ரோவர் தொகுதி ஆகும்.
EMI/EMC சோதனையின் போது, லாஞ்சர் இணக்கத்தன்மை, RF அமைப்புகளின் ஆண்டெனா துருவப்படுத்தல், சுற்றுப்பாதை மற்றும் இயக்கம், முழுமையான தன்னியக்க இணக்கத்தன்மை சோதனைகள், லேண்டர் & ரோவர் இணக்கத்தன்மை சோதனைகள் ஆகியவை
உறுதி செய்யப்பட்டன என இஸ்ரோ கூறியுள்ளது. மேலும் இந்த சோதனை திருப்திகரமாக அமைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/