/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project-33.jpg)
ISRO's Chandrayaan-3 on July 14, 2023.
சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவு சுற்றுப் பாதை இன்று (ஆகஸ்ட் 16) மேலும் குறைக்கப்பட்டு 153×163 கி.மீ என்ற அளவில் இறுதி சுற்றுப் பாதையை அடைந்துள்ளது. நாளை (ஆகஸ்ட் 17) மிக முக்கிய நிகழ்வாக விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்படுகிறது. விண்கலம் நிலவை அடைய உதவிய உந்துவிசை தொகுதியில் இருந்து (Propulsion module) நிலவில் தரையிறங்கும் லேண்டர்-ரோவர் தொகுதி நாளை பிரிக்கப்படுகிறது. அப்போது விண்கலம் 100 கி.மீ அளவில் சுற்றுப் பாதையை குறைக்கப்படும்.
இஸ்ரோ இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "புராபல்ஷன் மாட்யூல் மற்றும் லேண்டர் மாட்யூல் ஆகியவை தனித் தனியே பயணிப்பதற்கான நேரம் இது" . இன்று விண்கலத்தின் நிலவு சுற்றுப் பாதை மேலும் குறைக்கப்பட்டு சந்திரயான் -3 விண்கலம் 153 ×163 கி.மீ சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இத்துடன் விண்கலம் நிலவை சுற்றும் பணி நிறைவடைகிறது" என்று கூறியுள்ளது.
மேலும் நாளை உந்துவிசை தொகுதியில் இருந்து லேண்டர் தொகுதி பிரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 16, 2023
Today’s successful firing, needed for a short duration, has put Chandrayaan-3 into an orbit of 153 km x 163 km, as intended.
With this, the lunar bound maneuvres are completed.
It’s time for preparations as the Propulsion Module and the Lander Module… pic.twitter.com/0Iwi8GrgVR
லேண்டர்-ரோவர் தொகுதி ஆகஸ்ட் 23-ம் திட்டமிட்டபடி சந்திர மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உந்துவிசை தொகுதி என்னவாகும்?
மறுபுறம், நாளை உந்துவிசை தொகுதி பிரிக்கப்பட்ட உடன் தற்போது பயணிக்கும் இந்த இறுதி சுற்றுப் பாதையில் கிட்டத்தட்ட 3 முதல் 6 மாதங்கள் அங்கிருந்து ஆய்வு மேற்கொள்ளும். ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரி ஆஃப் ஹேபிடபிள் பிளானட் எர்த் (SHAPE) பயன்படுத்தி சந்திர சுற்றுப் பாதையில் இருந்து ஸ்பெக்ட்ரோ-போலரிமெட்ரிக் சிக்னேச்சர்ஸ் ஆஃப் எர்த் பற்றி ஆய்வு செய்யும்.
எக்ஸோப்ளானெட்டுகள் மற்றும் அவற்றில் உள்ள வாழ்வதற்கான அறிகுறிகளைத் தேடுவதற்கு உதவுவதற்காக, மக்கள் வசிக்கும் கிரகத்தின் - பூமியின் ஸ்பெக்ட்ரம் சிக்னேச்சர்ஸ் ஆய்வு செய்ய இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.