scorecardresearch

Lunar Eclipse 2023: இரவு 8.45 முதல் அதிகாலை 1.02 மணி வரை; இந்தியாவில் சந்திர கிரகணம்: சென்னையில் தெரியுமா? எப்படி பார்க்கலாம்?

Lunar eclipse on May 5: உலகில் பெனும்பிரல் சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இதனை இந்தியாவில் காணலாம்.

Penumbral lunar eclipse on May 5
Saturn Moons

Penumbral lunar eclipse on May 5: பொதுவாக, சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அரிய வகை ஹைபிரிட் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்று (மே 5) பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் இந்தியாவில் நிகழவில்லை என்றாலும், இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்திய நேரப்படி பெனும்பிரல் சந்திர கிரகணம் இன்று இரவு 8.45 மணி மற்றும் நாளை (மே 6) அதிகாலை 1.02 மணி இடையே நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சந்திரன் பூமியின் நிழலைக் கடந்து செல்லும் போது, இதன் விளைவாக சந்திர கிரகணம் நிகழ்கிறது என்று இன் தி ஸ்கை தெரிவித்துள்ளது.

அரிய கிரகணம்

இந்த ஆண்டின் 2 சந்திர கிரகணங்களில் முதல் சந்திர கிரகணம் நாளை (மே 5) நிகழ்கிறது. சூரிய கிரகணத்தை காட்டிலும் சந்திர கிரணம் உலகின் பல பகுதிகளில் தெரியும். சந்திரன் பெனும்ப்ரா எனப்படும் பூமியின் நிழலின் வெளிப்புற பகுதிக்குள் ஆழமாக செல்லும் போது பெனும்பிரல் கிரகணம் ஏற்படுகிறது. இது ஒரு அரிய கிரகணம் ஆகும்.

இந்த கிரகணம் நாளை நிகழ்ந்த பின் அடுத்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நிகழும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அடுத்த பெனும்பிரல் கிரகணம் செப்டம்பர் 2042-ல் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி

ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், அண்டார்டிகா ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் சந்திர கிரகணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் காண முடியும்.

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கிரகணத்தை காண முடியாது. டிரிக் பஞ்சாங்கின் படி, பெனும்பிரல் சந்திர கிரகணம் சந்திர கிரகணம் டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் காண முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Chennai will witness penumbral lunar eclipse on may 5

Best of Express