சீனா விண்வெளியில் சொந்தமாக டியாங்காங் எனப் பெயரிடப்பட்ட விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகிய சீனா, தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. சொந்த விண்வெளி நிலையத்தை "ஹெவன்லி பேலஸ்" எனவும் சீனா குறிப்பிடுகிறது. இந்நிலையில், டியாங்காங் விண்வெளி நிலையத்திலிருந்து
பூமியின் கீழ் சுற்றுப்பாதைக்கு (low-earth orbit) சிறிய ரக செயற்கைக்கோளை அனுப்பியது. 12 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் சீனா அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜியால் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மக்காவோ மாணவர் அறிவியல் செயற்கைக்கோள் 1 என்று அழைக்கப்படுகிறது.
எர்த் இமேஜிங், ரேடியோ தகவல் தொடர்பு மற்றும் பிற விண்வெளிப் பயணச் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இந்த எர்த் செயற்கைக்கோள் அனுப்பபட்டுள்ளது என சீனா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் தியான்ஹூ 5 (Tianzhou 5) என்ற சரக்கு கொண்டு செல்லும் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தியான்ஹூ-சீரிஸ் விண்கலத்தை பயன்படுத்தி ஏராளமான அறிவியல் உபகரணங்களையும் மினி-செயற்கைக்கோள்களையும் சுற்றுப்பாதைக்கு அனுப்ப சீனா செயல்பட்டு வருகிறது.
3 தொகுதிகள்
மக்காவோ மாணவர் அறிவியல் செயற்கைக்கோள் 1 சுமார் 385 கிலோமீட்டர் உயரத்தில் தோராயமாக வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. Space.com இன் படி அமெரிக்க விண்வெளிப் படையின் 18வது விண்வெளி பாதுகாப்புப் படையால் பட்டியலிடப்பட்டுள்ளது. 18வது ஸ்பேஸ் டிஃபென்ஸ் ஸ்குவாட்ரான் என்பது அமெரிக்க விண்வெளிப் படைப் பிரிவாகும், இது விண்வெளிப் பொருள் தரவுத்தளத்தை பராமரிக்கவும், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்பேஸ் கமாண்டின் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வை நிர்வகிக்கவும் பணிபுரிகிறது.
டியாங்காங் விண்வெளி நிலையத்தில் மூன்று தொகுதிகள் உள்ளன. தியான்ஹே (“heavenly river”) குழு (விண்வெளி வீரர்கள்) தொகுதி. மற்றும் ஆய்வக தொகுதி ஆகும். வென்டியன் (“quest for heavens”) மற்றும் மெங்டியன் (“dreaming of heaven”) ஆகிய 3 தொகுதிகள் ஆகும். முதல் தொகுதியான தியான்ஹேவில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்வர். வழிகாட்டுதல், வழிசெலுத்தல் மற்றும் உயிர் ஆதரவு அமைப்புகள் உட்பட விண்வெளி நிலையத்தின் பல முக்கிய செயல்பாடுகளை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/