சீனா விண்வெளியில் தனது நிரந்தர மற்றும் சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. டியாங்காங் என்று பெயரிடப்பட்ட விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவுடனாக போட்டியைத் தொடர்ந்து சீனா சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
விண்வெளி நிலையம் அமைக்கப்பதற்கான ஆய்வக பொருட்களை 3 தொகுப்புகளாக பிரித்து அனுப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 2 தொகுப்பு அனுப்பபட்டுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) வெற்றிகரமாக 3-வது மற்றும் கடைசி ஆய்வக தொகுப்பு விண்ணில் செலுத்தி அனுப்பிவைக்கப்பட்டது.
தெற்கு சீனா, ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 5பி (Long March-5B) ராக்கெட் மூலம் 23 டன் எடை கொண்ட மெங்டியன் தொகுப்பு (Mengtian) திங்கள்கிழமை பிற்பகல் விண்ணில் செலுத்தப்பட்டது. 13 மணி நேர பயணத்திற்குப் பிறகு டியாங்காங் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் டியாங்காங் விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் செவ்வாய்கிழமை அதிகாலை தொகுப்பு வந்தடைந்தாக கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தற்போது அனுப்பபட்டுள்ள 3-வது தொகுப்பு மற்ற இரண்டு தொகுப்புடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். தியான்ஹே கோர் தொகுதியுடன் இணைக்கப்படும் என திட்டக் குழு தெரிவித்துள்ளது. டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தற்போது 2 ஆண் மற்றம் 1 பெண் வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென் டோங், காய் சூஷே மற்றும் லியு யாங் ஆகியோர் ஜூன் மாதம் அனுப்பபட்டு 6 மாதங்கள் அங்கு பணி செய்து வருகின்றனர். இவர்கள் அண்மையில் விண்வெளியில் நடைபயணம் செய்தனர். கூடுதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் நிரந்தர விண்வெளி நிலையம் சுமார் 66 டன் எடை கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி நிலையம் அமைக்க இறுதி தொகுப்பு அனுப்பபட்ட நிலையில், பணிகள் விரைவில் முடிவடைந்து சீனா விண்வெளி நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் பணிகள் முடிக்கப்படும் என சீனா கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil