சீனா விண்வெளியில் நிரந்தரமாக தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு அதை நிறைவு செய்துள்ளது. சீனாவின் சொந்த விண்வெளி நிலையத்திற்கு டியாங்காங் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் டியாங்காங் கட்டுமானப் பணிகளை சீனா நிறைவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது சீனா 3 டைகோனாட்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஷென்சோ-15 திட்டம் மூலம் லாங் மார்ச் -2F கேரியர் ராக்கெட் மூலம் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராக்கெட் ஏவப்படும் தேதி குறித்து அறிவிப்பு இல்லை.
சீன விண்வெளி வீரர்கள் பூஜ்ஜிய ஈர்ப்பு ஆய்வகத்தில் 6 மாத காலம் தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பல்வேறு சோதனை முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது அனுப்பபடும் 3 டைகோனாட்கள் டியாங்காங்கில்
வசிக்கும் 3 வீரர்களுக்கு மாற்றாக செயல்படும்.
சீனா விண்வெளி தொழில்நுட்ப பிரிவு தலைமை வடிவமைப்பாளர் காவோ சூ கூறுகையில்,
ஒப்புதல் பணிகள் சுமார் ஐந்து முதல் பத்து நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு, ஷென்சோ-14 குழுவினர் ஷென்சோ-14 விண்கலத்தில் பூமிக்கு திரும்புவர் என்று கூறினார்.
ஷென்சோ-14 (Shenzhou 14) குழுவினர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டியாங்காங் பணிகளுக்காக அனுப்பப்பட்டனர். டியாங்காங் விண்வெளி நிலையம் 3 ஆய்வக தொகுப்புகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய தொகுதி தியான்ஹே முதல் முறை அனுப்பபட்டு இணைக்கப்பட்டது. அடுத்து வென்டியன் மற்றும் மெங்டியன் தொகுதிகள் அனுப்பபட்டன. தியான்ஹேவுடன் வென்டியன் மற்றும் மெங்டியன் தொகுதிகளை 6 பேர் அடங்கிய ஷென்சோ-14 குழுவினர் இணைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil