scorecardresearch

சீனா இலக்கு: 2023-இல் 200க்கும் மேற்பட்ட விண்கலங்களை அனுப்ப திட்டம்!

2023 china’s space missions: சீனா இந்தாண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட விண்கலங்களை பூமிக்கு வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளது.

சீனா இலக்கு: 2023-இல் 200க்கும் மேற்பட்ட விண்கலங்களை அனுப்ப திட்டம்!

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட பல நாடுகள் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. புது புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சீனா கடந்தாண்டு (2022) 50 திட்டங்களை செயல்படுத்தியது. இந்தாண்டு (2023) பெரிய அளவிலான திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. 60 விண்வெளி பயணங்களையும் 200க்கும் மேற்பட்ட விண்கலங்களையும் ஏவத் திட்டமிட்டுள்ளதாக சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷன் (CASC) தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவல் படி, 2023-ம் ஆண்டில் தியான்சோ -6 சரக்கு விண்கலம், ஷென்சோ -16 மற்றும் ஷென்சோ -17 போன்ற பெரிய அளவிலான ஆய்வு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. சொந்த விண்வெளி நிலையமான டியாங்காங் விண்வெளி நிலையைத்தை மேலும் வலுப்படுத்த உள்ளது. முழுமையாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பணிகளைத் தவிர, இந்த ஆண்டு புதிய தலைமுறை வணிகரீதியான தொலைநிலை உணர்திறன் செயற்கைக்கோள் அமைப்பின் கட்டுமானத்தையும் துரிதப்படுத்துவதை நிறுவனம் உறுதி செய்யும். 2023-ம் ஆண்டில் சந்திர ஆய்வு மற்றும் கிரக ஆய்வின் நான்காவது கட்டத்தை சீனா விண்வெளி மையம் முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சந்திர ஆய்வு சாங்’இ-7, செவ்வாய் ஆய்வு தியான்வென்-2 மற்றும் ஒரு நிலையான சுற்றுப்பாதை-மைக்ரோவேவ் கண்டறிதல் செயற்கைக்கோள் ஆகியவற்றைத் தொடர்ந்து உருவாக்குகிறது. பெய்ஜிங் இதன் கட்டுமானத்திற்கான நான்காவது கட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

Chang’e-7 விண்கலம் நிலவின் தென் துருவத்திற்கு ஏவப்படும் திட்டமாகும். அதைத் தொடர்ந்து Chang’e-6, மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை திருப்பி அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: China to send 60 missions outside earth in 2023 launch over 200 spacecraft