சீனா விண்வெளியில் தனது நிரந்தர மற்றும் சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. 'டியாங்காங்' என்று பெயரிடப்பட்ட விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவுடனாக போட்டியைத் தொடர்ந்து சீனா சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டியாங்காங் நிலையத்தில், ஜீரோ ஈர்ப்பு விசையில் உயிர் அறிவியல் ஆராய்ச்சி (Life science research in zero gravity) மேற்கொள்ள சீனா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விண்வெளியில் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்ய சீனா குரங்குகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள சீன அறிவியல் அகாடமி இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. இத்திட்டத்திற்கான அறிவியல் உபகரணங்கள், தேவைகள் இந்த நிறுவனம் வழங்கும். இனம்பெருக்கம் குறித்த ஆய்வு, இந்த ஆண்டு தொடக்கத்தில் டியாங்காங்கிற்கு அனுப்பபட்ட வெண்டியன் (Wentian module) ஆய்வக தொகுதியில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 சோதனைகள்
சீன அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளர் ஜாங் லு கூறுகையில், "எலிகளை வைத்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விண்வெளியில் அவை எவ்வாறு வளர்கின்றன, இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த சோதனை உயிரினங்கள், விண்வெளியில் எவ்வாறு தன்னை மாற்றி வளர்கிறது. Microgravity மற்றும் பிற விண்வெளி சூழல்களுக்கு அவை எவ்வாறு வளர்கின்றன என்பதை பற்றி அறிந்து கொள்ள, நமது புரிதலை மேம்படுத்த உதவும்" என்று கூறினார்.
சீனா தியான்ஹே (Tianhe), வெண்டியன் (Wentian), மெங்டியன் (Mengtian) ஆகிய 3 ஆய்வக தொகுதிகளை தனது விண்வெளி நிலையத்தில் அமைக்கிறது. சீனா விண்வெளி ஆய்வு மையம் China Manned Space Agency (CMSA) பூமிக்கு அப்பால் மருத்துவ ஆராய்ச்சி முதல் தொழில்நுட்ப ஆய்வுகள் வரை 1,000 சோதனைகளை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. டியாங்காங் விண்வெளி நிலையம் தற்போது பூமியில் இருந்து 388.9 கி.மீ மேலே அமைக்கப்பட்டுள்ளது.
9 சர்வதேச அறிவியல் சோதகளை சீனா தேர்ந்தெடுத்து வரும் ஆண்டுகளில் டியாங்காங் அனுப்பி மேற்கொள்ளப்படும். இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil