கடந்த வார விண்வெளி நிகழ்வில் முன்னாள் பென்டகன் அதிகாரியின் கருத்து அமெரிக்காவில் புயலைக் கிளப்பியுள்ளது என்றே கூறலாம். ஏலியன்களின் வாகனம் என்று கருத்தப்படும் யு.எப்.ஓக்கள் Unidentified flying objects (UFOs) அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிடம் உள்ளதாக வாக்குமூலம் அளித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய
அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதகவும் கூறியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸில் ஓய்வு பெற்ற பென்டகன் அதிகாரி, முன்னாள் விமானப் படை உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ் பேசுகையில், அமெரிக்காவில் பல ஆண்டுகளாக ரகசிய திட்டங்கள் உள்ளன. அமெரிக்காவில் யு.எப்.ஓக்கள் உள்ளன. அமெரிக்காவில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளைப் பார்த்தேன். 2004-ம் ஆண்டு இதைப் பார்த்தேன். அரசு அதிகாரிகள் சிலர் இந்த தகவலை வெளிவர விடாமல் மறைத்து வைத்தனர். அதை வெளியிட முயன்றவர்கள் தண்டிக்கப்பட்டனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இது அமெரிக்காவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. எனினும் க்ரூஷ் அவர் பார்த்தாகவும் கூறும் எந்தவொரு விஷயத்தையும் தனிப்பட்ட முறையில் பார்த்ததாகக் கூறவில்லை. அவர் பேசும் பெரும்பாலான தகவல்கள் மற்ற "மூத்த முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளை" மேற்கோள் காட்டி பேசப்பட்டுள்ளன. இந்த யுஎஃப்ஒக்களின் புகைப்படங்களை தாம் பார்க்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும், சாட்சியத்தின் போது அவர் தனது பெரும்பாலான பதில்களை சுருக்கமாக வைத்திருந்தார்.
இருப்பினும் டேவிட் க்ரூஷின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க அரசு விவாதிக்க முடிவு செய்துள்ளது. விசாரணையில் அவர் கூறிய கருத்துகள் பொய் என்று தெரியவந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
பூமியின் மீது ஏவப்பட்ட ஜெட் விமானம்
மார்காரியன் 421 எனப்படும் தொலைதூர சூப்பர்மாசிவ் கருந்துளை பூமியை நேரடியாக இலக்காகக் கொண்ட உயர் ஆற்றல் ஜெட் துகள்களை வெளியேற்றுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் கவலைப்பட வேண்டாம். "பிளேசர்" நமது கிரகத்தில் இருந்து 400 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கருந்துளைகள் சில சமயங்களில் ஒளியின் வேகத்தில் துகள்களை உமிழ்ந்தாலும், இந்த துகள்கள் நம்மை வந்தடைவதற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
அணுசக்தி ராக்கெட் எஞ்சின்
நாசாவும், டி.ஏ.ஆர்.வி.ஏவும் இணைந்து அணுசக்தி ராக்கெட் எஞ்சினை வடிவமைக்க உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் இதனை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று, மேரிலாந்தை தளமாகக் கொண்ட விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின்,
அணுசக்தி ராக்கெட் எஞ்சின் வடிவமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்தன.
அணுசக்தி வெப்ப இயந்திரங்கள் விண்வெளியில் பயணிக்கும் போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் என்றும், விண்வெளியில் வீரர்களுக்கு ஏற்படும் அபாயங்களை தடுக்க உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“