scorecardresearch

8,000 மீட்டருக்கு கீழ்.. இதுவரையில் இல்லை.. மிகவும் ஆழமான பகுதியில் தென்பட்ட மீன்கள்; படம் பிடித்த விஞ்ஞானிகள்

ஜப்பான்- ஆஸ்திரேலிய கூட்டு அறிவியல் பயணத்தின் போது இதுவரை இல்லாத வகையில் மிகவும் ஆழமான பகுதியில் மீன்கள் இருந்ததை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்,

Deepest-ever fish caught
Deepest-ever fish caught

ஜப்பானிய-ஆஸ்திரேலிய கூட்டு அறிவியல் பயணத்தின் போது இதுவரையில் இல்லாத வகையில் மிகவும் ஆழமான கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 5 மைல் (8 கிலோமீட்டர்) கீழ் தென்பட்ட மீன்களை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்,

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் டோக்கியோ கடல் அறிவியல் பல்கலைக்கழகம் ஜப்பானின் தெற்கில் உள்ள ஜப்பான் கடலில்
இரண்டு மாத காலம் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இதுவரையில் இல்லாத வகையில் மிகவும் ஆழமான சுமார் 8,022 மீட்டர் நீருக்கடியில் அமைக்கப்பட்ட பொறிகளில் இரண்டு நத்தை மீன்கள் சிக்கியதாக பயணத்தின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் ஆலன் ஜேமிசன் திங்களன்று தெரிவித்தார்.

சூடோலிபாரிஸ் பெல்யாவி இனத்தைச் சேர்ந்த நத்தை மீன்கள் கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 8,000 மீட்டருக்கு கீழ் தென்பட்டன என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. மீன் எவ்வளவு பெரியதாக இருந்தது என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சுமார் 11 சென்டிமீட்டர் (4.3 அங்குலம்) நீளம் கொண்டதாக இருப்பது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிஎஸ்எஸ்வி பிரஷர் டிராப்பில் இருந்து கூட்டுப் பயணத்தின் போது இயக்கப்படும் தொலைதூர கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகால ஆய்வின் ஒரு பகுதியாக, தெற்கு ஜப்பானில் உள்ள இசு-ஒகசவாரா அகழியில் 8,336 மீட்டர் ஆழத்தில் நீந்திய அறியப்படாத நத்தை மீன் இனத்தையும் பதிவு செய்தது.

இதுகுறித்து மைண்டெரூ-யுடபிள்யூஏ ஆழ்கடல் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் ஜேமிசன் கூறுகையில், ஜப்பானிய அகழிகள் ஆய்வு செய்வதற்கு தகுந்த இடமாக இருந்தன. அதில் அதிக வளங்கள் நிறைந்துள்ளன என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Deepest ever fish caught and filmed off japan by scientists

Best of Express