Advertisment

ககன்யான் திட்டம்.. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முதல் சோதனை : இஸ்ரோ தகவல்

Gaganyaan mission: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை பயணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மேற்கெள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
ககன்யான் திட்டம்.. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முதல் சோதனை : இஸ்ரோ தகவல்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை பயணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்படும். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisment

இந்தியாவின் இஸ்ரோ ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு முதல் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது. சோதனையின் போது, ஹெவி லிஃப்ட் சினூக் ஹெலிகாப்டர் மற்றும் சி-17 குளோப்மாஸ்டர் விண்கலத்தையும் விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மற்றும் விண்கலத்தில் தான் ககன்யான் திட்ட விண்வெளி வீரர்கள் 3 நாள் பயணம் மேற்கொள்ளவர் என திட்ட இயக்குநர் ஆர். உமாமகேஷ்வரன் தெரிவித்தார்.

இந்திய விண்வெளி காங்கிரஸில் உரையாற்றிய அவர் கூறுகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பை (Environment Control System) வடிவமைத்து முடித்துள்ளனர். இது விண்வெளியில் வீரர்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். அடுத்த ஆண்டு டிசம்பரில் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன் வெவ்வேறாக 17 சோதனைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தியா சுதந்திரம் பெற்று இந்தாண்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடும் வகையில், ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த 2018-ம் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக திட்டம் தாமதமானது. 2024 இறுதியில் அல்லது 2025 தொடக்கத்தில் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமாமகேஷ்வரன் மேலும் கூறுகையில், "சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைப்பது மிகவும் சவாலானது. இது திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இதில் தான் வீரர்கள் தங்கி இருப்பர். அவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வழங்க வேண்டும், கார்பன் டை ஆக்சைடு அகற்ற வேண்டும். ஈரப்பதத்தை அகற்ற வேண்டும், வெப்பநிலையை பராமரிக்க வேண்டும். தீ விபத்து ஏற்படாத வகையில் வடிவமைத்து உறுதிப்படுத்த வேண்டும்.

இது மிகவும் சவாலான தொழில்நுட்பம். வெளிநாட்டு பங்களிப்பு இல்லாமல், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

4 வீரர்களுக்கு பயிற்சி

மேலும், "இதை வடிவமைக்கும் திறன் நம்மிடம் உள்ளது. எனவே நாங்கள் அதைச் செய்கிறோம். இதை வடிவமைக்க சிறிது காலம் எடுத்துக் கொண்டது. இப்போது அனைத்து வடிவமைப்பையும் முடித்துவிட்டோம். இவை பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. சோதனை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

விண்வெளிப் பயணம் மேற்கொள்ள 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ரஷ்யாவில் ஆரம்பப் பயிற்சியை முடித்தனர். தற்போது பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் மேலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment