அதிசய நிகழ்வு.. இன்று இரவு வானில் தெரியும் 5 கோள்கள்.. நாம் எப்படி பார்ப்பது?

வியாழன், புதன், வீனஸ், யுரேனஸ் மற்றும் செவ்வாய் ஆகிய 5 கிரகங்கள் இன்று (மார்ச் 28) இரவு வானத்தில் தோன்றும் ஆச்சரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அவை பார்ப்பதற்கு ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் இருக்கும் என்றாலும் அவை உண்மையில் கிரக அமைப்பில் நேர்கோட்டில் இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

5 planets night sky
5 planets night sky

வியாழன், புதன், வீனஸ், யுரேனஸ் மற்றும் செவ்வாய் ஆகிய 5 கிரகங்கள் இன்று (மார்ச் 28) இரவு வானத்தில் தோன்றும் ஆச்சரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அவை பார்ப்பதற்கு ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் இருக்கும் என்றாலும் அவை உண்மையில் கிரக அமைப்பில் நேர்கோட்டில் இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், புதன், வீனஸ், யுரேனஸ் மற்றும் செவ்வாய் (Jupiter, Mercury, Venus, Uranus and Mars) ஆகிய 5 கிரகங்கள் இன்று (மார்ச் 28) இரவு வானத்தில் தோன்றும் ஆச்சரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அவை பார்ப்பதற்கு ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் இருக்கும் என்றாலும் அவை உண்மையில் கிரக அமைப்பில் நேர்கோட்டில் இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவை பார்ப்பதற்கு என்றும் கூறியுள்ளனர்.

இந்த 5 கிரகங்களை நாம் எப்படி பார்ப்பது?

உலகின் பல்வேறு இடங்களில் இந்த நிகழ்வை காணலாம். தடையற்ற Horizon View இருக்கும் இடத்தில் இதைக் காணலாம். Sky & Telescope இதழின் மூத்த அதிகாரி Rick Feinberg கருத்துப்படி, வீனஸ் மற்றும் செவ்வாயைக் கண்டறிவது எளிதாக இருக்கும். வீனஸ் சூரிய குடும்பத்தில் மிகவும் பிரகாசமான கிரகம் மற்றும் வானத்தில் உயரமான இடத்தில் இருக்கும். இதற்கு அடுத்து செவ்வாய் பிரகாசமாக இருக்கும். ஆனால் மறுபுறம், வீனஸ் அருகே தோன்றும் யுரேனஸ், மங்கலாகத் தோன்றும் என்றார்.

சூரியன் மறையும் வரை காத்திருந்து, பின்னர் வெளியே சென்று, தொலைநோக்கி ( binoculars) உதவியுடன் வானத்தில் பார்க்கலாம். மங்கலான புதனுக்கு அடுத்தபடியாக நீங்கள் பிரகாசமான வியாழனைப் பார்க்க முடியும் என்றார்.

இந்த அரிய வான நிகழ்வின் சிறந்த காட்சியைப் காண, முடிந்தவரை குறைந்த ஒளி மாசு உள்ள இடத்திற்குச் செல்லவும் மற்றும் தடைகள் இல்லாத தெளிவான வானம் தெரியும் இடத்திற்கு சென்று பார்க்கவும். வியாழன் மற்றும் புதன் கிரகங்களைத் தவிர பெரும்பாலான கிரகங்களை binoculars இல்லாமலே வெறும் கண்களாலே பார்க்க முடியும்.

அதிசய நிகழ்வு

இன்று இரவு வானில் 5 கோள்கள் தென்பட உள்ளன. ஆனால் உண்மையில் இவை ஒரே நேர்கோட்டில் தோன்றாது. இருப்பினும் கடந்தாண்டு இந்த நிகழ்வு நடந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை சூரியனிலிருந்து தூரமாக வந்து கிழக்கில் இருந்து தெற்கே உயரமாக வானத்தின் குறுக்கே நீண்டு சென்றபோது அவை ஒரே நேர்கோட்டில் தென்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் நிகழ்ந்தது 18 ஆண்டுகளில் முதல் முறையாகும். இதே போல் கடந்த 2004-ம் ஆண்டு நிகழ்ந்தது. இது போன்ற நிகழ்வு மீண்டும் 2040-ம் ஆண்டில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: How to watch 5 planets in rare celestial event tonight

Exit mobile version