டியர் மூன் என்று அழைக்கப்படும் திட்டத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மேசாவாவுடன் அடுத்த ஆண்டு நிலவிற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர். மேசாவா கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடன் பயணிக்கும் 8 பேர் அடங்கிய குழுவை அறிவித்தார்.
8 பேர் அடங்கிய குழு
அதன்படி, டிஜே மற்றும் அமெரிக்கா சேர்ந்த தயாரிப்பாளர் ஸ்டீவ் அயோகி, டிம் டாட், அமெரிக்க யூடியூபர்; செக் கலைஞர் யேமி ஏ.டி; ரியானன் ஆடம், ஐரிஷ் புகைப்படக் கலைஞர்; பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் கரீம் இலியா; அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் பிரெண்டன் ஹால்; இந்திய நடிகர் தேவ் ஜோஷி மற்றும் தென் கொரியாவின் கே-பாப் இசைக்கலைஞர் டாப் ஆகிய 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் ஃபேஷன் இணையதளமான Zozo Inc இன் நிறுவனர் யுசாகு மேசாவா, கடந்த ஆண்டு டிசம்பரில் சோயுஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சுற்றுலா சென்று திரும்பினார். 2023-ம் ஆண்டு மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் நிலவுக்கு சுற்றுப் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு விண்வெளி பயணத்தின் புதிய யுகத்தை அறிமுகப்படுத்துகின்றன. டியர் மூன் குழுவினர் ஒரு வார காலம் பயணம் மேற்கொள்கின்றனர். ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மேசாவா கடந்த வாரம் எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். அதன்பின் இந்த இந்த திட்டத்தை அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/