இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. நாள்தோறும் புது புது ஆய்வுகளை செய்து வருகின்றன. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு மேற்கொள்கின்றன. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் விண்வெளியில் நடைபயணம் செய்தனர். மறுபுறம் சீனா அமெரிக்காவுடனான போட்டி காரணமாக சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. விண்வெளித் துறை பலகட்ட வளர்ச்சி அடைந்து வருகிறது.
அந்தவகையில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக அண்மையில் தனியார் நிறுவன ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டது. விக்ரம்-எஸ் எனப் பெயரிடப்பட்ட அந்த ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை சுமந்து சென்று சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுத்தியது.
இந்தநிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பி.எஸ்.எல்.வி-54 ராக்கெட்டை ஏவ திட்டமிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி-54 ராக்கெட் மூலம் ஓஷன்சாட்-3 (Oceansat-3 ) மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை ( Nano satellites)வரும் நவம்பர் 26-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். EOS-06 ஓஷன்சாட்-3 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் ( பூட்டான்சாட், பிக்சலில் இருந்து 'ஆனந்த்', துருவா ஸ்பேஸில் இருந்து தைபோல்ட், மற்றும் ஆஸ்ட்ரோகாஸ்ட்) ஏவப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“