Advertisment

இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14-ம் தேதி வெள்ளிக் கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளது.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayaan-3 Mission

Chandrayaan-3 Mission

இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14-ம் தேதி வெள்ளிக் கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஏவப்பட உள்ளது என ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது

Advertisment

சந்திரயான்-3 திட்டத்தின் நோக்கம்

சந்திரயான்-3 திட்டம், தோல்வியுற்ற சந்திரயான்-2 திட்டத்தின் தொடர்ச்சியாகும். நிலவின் மேற்பரப்பில் லேண்டர் மற்றும் ரோவரை மென்மையான தரையிறக்கம் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

செப்டம்பர் 6, 2019-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பபட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் தோல்வி அடைந்தது. மிஷனின் விக்ரம் லேண்டர் மென்மையான தரையிறக்கம் (Soft landing) செய்யத் தவறியது. விண்கலம் இறங்கத் தொடங்கிய சுமார் 13 நிமிடங்களில் தோல்வி ஏற்பட்டது. இதுவரை, 3 நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க முடிந்தது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தங்களது விண்கலன்களை தரையிறக்கி உள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது - லேண்டர் தொகுதி, உந்துவிசை தொகுதி (propulsion module) மற்றும் ஒரு ரோவர். நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கும், ரோவரை நிலைநிறுத்துவதற்கும் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 எல்.வி.எம்-3 ராக்கெட்

LVM-3 அல்லது Launch Vehicle Mark-III, இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட மூன்று-நிலை நடுத்தர-தூக்கு ஏவுகணை வாகனம். இது முன்பு GSLV மார்க் III என அழைக்கப்பட்டது. இது இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆகும், அதனால் சந்திரயான்-3 திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

publive-image

எல்.வி.எம்-3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரம், 4 மீட்டர் விட்டம் கொண்டது. இது 640 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 8,000 கிலோகிராம் சுமையை low-Earth orbit பாதைக்கு கொண்டு செல்லும். மேலும் Geostationary transfer orbit பகுதிக்கு 4,000 கிலோகிராம் பேலோடை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment