scorecardresearch

சிங்கப்பூர் செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட்

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் இன்று விண்வெளிக்கு அனுப்பபட்ட சிங்கப்பூர் நாட்டின் 2 செயற்கைக் கோளைகள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

PSLV C55
PSLV C55

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டெலியோஸ் (TeLEOS-02) செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி சி-55 (Polar Satellite Launch Vehicle-C55) ராக்கெட் மூலம் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் வெற்றிகரமாக செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

இஸ்ரோ உள்நாட்டு செயற்கைக் கோள் மட்டுமல்லாது வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் ஏவி வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்காக, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி இன்று டெலியோஸ்-02 செயற்கைக் கோள் ஏவப்பட்டது. டெலியோஸ் செயற்கைக்கோள் 750 கிலோ எடை கொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது செயற்கை துளை ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுத்திறனில் தரவை வழங்கும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள்கள் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.

டெலியோஸ்-2 செயற்கைக் கோள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். முன்னதாக, பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக் கோள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Isros pslv c55 successfully places two singapore satellites into orbit

Best of Express