ஜப்பானின் ககோஷிமாவில் உச்சினூரா விண்வெளி மையத்திலிருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலம் 8 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பபட்டது. உச்சினூரா மையத்திலிருந்து ஏவப்பட்ட 7 நிமிடங்களில் திட்டம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஜப்பானில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட முதல் ராக்கெட் தோல்வி இதுவாகும். எப்சிலன்-6 ராக்கெட் பூமியைச் சுற்றி வர சரியான நிலையில் இல்லாத காரணத்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது.
ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியின் தலைவர் ஹிரோஷி யமகவா கூறுகையில், "ராக்கெட் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும். ராக்கெட் திட்டமிட்டபடி பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த சரியான நிலையில் இல்லை. பாதுகாப்பான ஏவுதல் செய்ய முடியாததை அடுத்து, ராக்கெட் தானாக அழியும் படி (self-destruction) சிக்னல் கொடுக்கப்பட்டது. ராக்கெட் மற்றும் அதன் பாகங்கள் பிலிப்பைன்ஸின் கிழக்கே கடலில் விழுந்ததாக நம்பபடுகிறது.
எப்சிலன் ராக்கெட்டில் முதல் முறையாக வணிக பயன்பாட்டிற்கான ராக்கெட் எடுத்து செல்லப்பட்டது. இந்த தோல்வி இனி வருங்காலத்தில் எப்சிலான் ராக்கெட் பயணங்களை பாதிக்கும். அடுத்தாண்டு ஏவ திட்டமிடப்பட்ட எப்சிலன்- எஸ் (Epsilon-S) வணிக பயன்பாட்டிற்கான ஏவுதலை பாதிக்க கூடும் எனத் தெரிவித்தார்.
மேலும், முதற்பணியாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகும்" என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“