Advertisment

ஜப்பானின் ’SLIM’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

author-image
Vasuki Jayasree
New Update
’SLIM’ விண்கலம்

’SLIM’ விண்கலம்

தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Advertisment

ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான பயண திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக ‘ஸ்லிம்’ என்ற விண்கலத்தை ஜப்பான் தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தை எச்.2.ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டது. இந்த திட்டம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜப்பான் நாட்டின் தென்மேற்கே ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிலவில் தரையிரங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவை ஆய்வு  செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5 வது நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடதக்கது.

 “தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment