உலகின் மிகப்பெரிய பணக்காரரும், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ட்விட்டர் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் உடன் ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மேசாவா ஆன்லைனில் சந்தித்து பேசினார். இதன்பின், யுசாகு விண்வெளி துறையில் பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக ட்விட் செய்தார்.
ஆன்லைன் ஃபேஷன் இணையதளமான Zozo Inc இன் நிறுவனர் யுசாகு மேசாவா, கடந்த ஆண்டு டிசம்பரில் சோயுஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சுற்றுலா சென்று திரும்பினார். 2023-ம் ஆண்டு மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் நிலவுக்கு சுற்றுப் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
47 வயதான தொழில்முனைவோர், தான் மஸ்க்குடன் ஆன்லைன் சந்திப்பு நடத்தியதாகவும், டிசம்பர் 9-ம் தேதி விண்வெளி குறித்து பெரிய அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் ட்விட் செய்துள்ளார். விண்வெளி ஆர்வலர் 2023-ம் ஆண்டில் 1 வார காலம் நிலவில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு விண்வெளி பயணத்தின் புதிய யுகத்தை அறிமுகப்படுத்துகின்றன.
யுசாகுவின் ட்வீட்டைத் தொடர்ந்து, செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி விண்வெளி தொடர்பான வணிகத்தை வழங்கும் Inclusive Inc இன் பங்குகள் 11.7% உயர்ந்து 1,171 யென் ஆக முடிவடைந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/