scorecardresearch

ஒரு எலும்பு மட்டும் 100கி: இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரியது; நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு

அர்ஜென்டினா விஞ்ஞானிகள் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் புதைபடிவத்தை கண்டுபிடித்தனர். இது இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரியது என்றும் கூறினர்.

Long-necked dinosaur fossil
Long-necked dinosaur fossil

அர்ஜென்டினாவின் பழங்கால ஆராய்ச்சியாளர்கள், நாட்டின் தெற்கு படகோனியா பகுதியில், நீண்ட கழுத்து கொண்ட தாவரவகை டைனோசரின் எச்சங்களை கண்டுபிடித்தனர், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது என்று கூறியுள்ளனர்.

பியூப்லோ பிளாங்கோ நேச்சர் ரிசர்வ் இந்த கண்டுபிடிப்பை வியாழனன்று வெளியிட்டனர். இது முதன்முதலில் விஞ்ஞானிகளால் 2018 இல் கண்டுபிடிக்கப்பட்டது. பியூனஸ் அயர்ஸ் ஆய்வகத்திற்கு கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் எலும்புகளை கொண்டு சென்ற போது எலும்புகள் மிகவும் பெரியதாக, கடினமாக இருந்ததால் வேன கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எச்சங்கள் மீட்கப்பட்டன.

விபத்தின் போது உருண்டு உயிர் பிழைத்ததால், கடின வேகவைத்த மற்றும் துருவல் என்று பொருள்படும் படி டைனோசருக்கு “சுக்கரோசரஸ் டிரிபியெண்டா” என்று பெயரிட விஞ்ஞானிகள் முடிவு செய்ததாக தொல்பொருள் ஆய்வாளர் நிக்கோலஸ் சிமென்டோ கூறினார்.

தாவரங்கள் உண்டு வாழும் டைனோசர்

50 டன்கள் மற்றும் 30 மீட்டர் நீளம் கொண்ட சுக்கரோசரஸ், மலைப்பகுதியான ரியோ நீக்ரோ மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் ஆகும். இது பிற்பகுதியில் கிரெட்டேசியஸ் காலத்தில் வேட்டையாடுபவர்கள், மீன் மற்றும் கடல் ஆமைகளுடன் வாழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

1.90 மீட்டர் நீளமுள்ள சுக்கரோசரஸின் தொடை எலும்பு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 100 கிலோகிராம் எடையுள்ளதாகவும், அதை தூக்குவதற்கு குறைந்தது மூன்று பேர் தேவைப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

உலகளவில் தாவரங்கள் உண்டு வாழும் மிகப்பெரிய டைனோசர் இனமான கொலோசல் படகோட்டிடன் மயோரம் உள்ளிட்டவைகளுக்கு தாயகமாக படகோனியா இருந்துள்ளது. இருப்பினும் விஞ்ஞானிகளுக்கு இந்த இனங்கள் ஏன் இவ்வளவு உயரமாக, வேகமாக வளர்ந்தன, சில சமயங்களில் வாழ்நாள் முழுவதும் இந்த இனங்கள் வளர்வதை நிறுத்தவில்லை என்றும் கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Science news download Indian Express Tamil App.

Web Title: Long necked dinosaur fossil found by argentine scientists is one of biggest ever

Best of Express