ஜூலை நடுப்பகுதியில், மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜூரியன் விரிகுடாவிற்கு அருகிலுள்ள கடற்கரையில் ஒரு ராட்சத உலோகப் பொருள் கரை ஒதுங்கியது. மிகப்பெரிய செப்பு சிலிண்டர் வடிவிலான பொருள் ஏதோ ஒரு நாட்டின் ராக்கெட் பாகம் என கணிக்கப்பட்டது. ராக்கெட்டின் ஒரு பாகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் பாகம் என உறுதி செய்தது. ராக்கெட்டின் மூன்றாம் கட்டத்தில் பயன்படுத்தக் கூடிய பொருள் என்றும் இது பி.எஸ்.எல்.வி (போலார் சேட்டிலைட் லாஞ் வெஷிகள்) ராக்கெட் பாகம் என்றும் கூறியது.
விண்வெளிக்கு ஏவப்பட்ட பின் ராக்கெட் பாகம் முழுமையாக எரியாமல் விண்வெளி குப்பையாக விழுந்திருக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறியது. இந்த பாகம் தற்போது ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்தால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் இஸ்ரோ உடன் இணைந்து அடுத்தகட்ட பணிகளை செய்து வருகிறது. ஐக்கிய நாடுகளின் விண்வெளி ஒப்பந்தங்களின் கீழ் இரு நாடுகளும் அடுத்த பணிகளுக்கான வேலையில் ஈடுபட்டுள்ளன.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இஸ்ரோ ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக் கோளை பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவியது.
இந்த ராக்கெட்டின் முழுமையாக எரிக்கப்படாத பாகமாக இது இருக்கலாம் என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் கூறுகையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக் கோள் தெற்கு திசையில் ஏவப்பட்டது. வளிமண்டலத்தில் ராக்கெட் மீண்டும் திரும்பும் போது அதன் ஒரு பகுதி முழுமையாக எரியாமல் கடலில் விழுந்திருக்கலாம். அது பின்னர் ஆஸ்திரேலிய கரையை நோக்கி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
இதுபோன்ற வேளைகளில் ஐக்கிய நாடுகளின் தீர்மானப்படி விண்வெளிப் பொருட்களால் ஏற்படும் சேதங்களுக்கு ராக்கெட்டை ஏவிய நாடு முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதாகும். இந்நிலையில் தற்போதைய நிலையில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் பாகத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால் ஆஸ்திரேலியா இந்தியா மீது வழக்குத் தொடரலாம். இழப்பீடு கோரலாம் என்றும் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“