அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான (நாசா) ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில் அடுத்தடுத்த திட்டங்களுக்கு நாசா தயாராகி வருகிறது. ஆர்ட்டெமிஸ் 2,3 திட்டம் கிட்டதிட்ட ஒரே பயணமாக இருக்கும்.
ஆர்ட்டெமிஸ் 2, 3 திட்டத்தில் மனிதர்கள் நிலவுக்கு அனுப்படுவர். 1972-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் அனுப்பபட உள்ளனர். இந்த திட்டத்தில் மனிதர்கள் நிலவு சுற்றுப் பாதைக்கு சென்று திருப்புவர். ஆர்ட்டெமிஸ் முழுமையான திட்டத்தில் நிலவில் மனிதர்கள் தரையிறங்கி ஆய்வு செய்வர்.
ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்டில் வீரர்கள் நிலவு சுற்றுப் பாதைக்கு சென்று திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தை தாமதமாக்கும் என நாசா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் அமைப்பு சரியான நேரத்தில் தயாராகவில்லை என்றால் ஆர்ட்டெமிஸ் 3 பணி தாமதமாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக டிசம்பர் 2025-ம் ஆண்டு திட்டத்தை செயல்படுத்த நாசா திட்டமிட்டிருந்தது.
அமெரிக்க தேசிய அகாடமிகளின் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் இன்ஜினியர் போர்டு மற்றும் ஸ்பேஸ் ஸ்டடீஸ் போர்டு ஆகிய அமைப்பினர் ஜூன் 7(புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இதை தெரிவித்தனர். நாசா விண்வெளி ஏஜென்சி 2021 இல் விண்வெளி வீரர்களை சந்திர மேற்பரப்புக்கு அனுப்ப முதல் வணிக மனித லேண்டரை உருவாக்க ஸ்பேஸ் எக்ஸை நாசா தேர்ந்தெடுத்தது. 1972 ஆம் ஆண்டு அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு ஆர்ட்டெமிஸ் 3 மூலம் மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக 1 பெண் உள்பட 4 விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் இந்த குழுவினர் விண்வெளி ஏவுதள அமைப்பு (எஸ்.எல்.எஸ்) ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தில் சந்திர சுற்றுப்பாதைக்கு (Lunar orbit) அனுப்பபடுவர்.
இதைத் தொடர்ந்து ஆர்ட்டெமிஸ் 3 பயணத்தின் விண்வெளி வீரர்கள் சந்திர சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, குழு உறுப்பினர்களின் 2 பேர் சந்திர மேற்பரப்புக்கான (Lunar Surface) பயணத்தை தொடங்குவர்.
இதற்காக ஸ்பேஸ்எக்ஸின் மனித லேண்டிங் சிஸ்டம் ராக்கெட்டிக்கு (HLS)மாற்றுவர்.
திட்டப்படி, 2 வீரர்கள் சந்திர சுற்றுப்பாதையிலும் 2 வீரர்கள் சந்திர மேற்பரப்பிற்கும் சென்று வருவர். சந்திர மேற்பரப்பிற்கு செல்லும் வீரர்கள் அங்கு 1 வராம் ஆய்வு செய்து பின்னர் சந்திர சுற்றுப்பாதைக்கு வந்து பின்னர் 4 வீரர்களும் பூமிக்கு திரும்புவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“