அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு ஆர்ட்டெமிஸ் I ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக ஏவியது. இந்நிலையில் அடுத்த முயற்சியாக ஆர்ட்டெமிஸ் II திட்டத்திற்கு நாசா தயாராகி வருகிறது. தற்போது ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்று திரும்புவர்.
இதற்காக 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழுவை நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிலையம் ஏப்ரல் 3-ம் தேதி அறிவிக்க உள்ளது. ஆர்ட்டெமிஸ் 2 திட்டம் ஆர்ட்டெமிஸ் மிஷனின் முதல் crewed mission ஆகும். இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவைத் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்புவர். ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் நிலவில் வீரர்கள் இறங்கி நீண்ட காலம் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது,
ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் வீரர்கள் 2.2 மில்லியன் கிலோமீட்டர் தூர பயணம் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தில் 3 நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி (CSA) வீரர் இடம் பெற உள்ளனர். இந்த வீரர்களின் பெயர்கள் ஏப்ரல் 3-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிலையம் கூட்டாக அறிவிக்க உள்ளது.
ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதன் சோதனை முயற்சியாக ஆர்ட்டெமிஸ் II திட்டம் அமைய உள்ளது. விண்வெளி ஏவுதல் அமைப்பு ராக்கெட், ஓரியன் விண்கலம் மற்றும் அவற்றை ஏவுவதற்குத் தேவையான தரை அமைப்புகள் சோதனை செய்யப்படும். கிட்டதட்ட 10 நாள் பயணமானது ஓரியன் விண்கலத்தின் பாதுகாப்பு, அதன் திறன் மற்றும் தொழில்நுட்பங்களை சோதனை செய்ய அடித்தளமாக அமைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/