அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 8 மாத கால இடைவெளிக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் வீரர்கள் நிலையத்திற்கு வெளியே இன்று (நவம்பர் 15) நடைபயணம் செய்ய உள்ளனர். விண்வெளி வீரரின் தலைக்கவசத்தில் (Astronaut’s helmet) சிறிதளவு தண்ணீர் காணப்பட்டதால், மார்ச் 23-ம் தேதி மேற்கொள்ளவிருந்த முதல் நடைபயணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றைய நடைபயணம் மக்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என நாசா அறிவித்துள்ளது.
நேரலை
இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. வீரர்களின் நடைபயணம் 7 மணி நேரம் ஒளிபரப்ப பட உள்ளது. இதனை நாசா டெலிவிஷன் (NASA Television), நாசா ஆப் ( NASA app) அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங்கைப் பார்க்கலாம்.
விண்வெளி நடைபயணத்தின் போது என்ன நடக்கும்?
நாசா வீரர்கள் ஜோஷ் கசாடா மற்றும் ஃபிராங்க் ரூபியோ இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடைபயணம் செய்ய உள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து குவெஸ்ட் ஏர்லாக் மூலம் வெளியேறி நிலையத்தின் டிரஸ் அசெம்பிளியில் ஒரு மவுண்டிங் பிராக்கெட்டைச் சேர்ப்பார்கள். இது பின்னர் குழுவினருக்கு தேவையான மின் சக்தியை அதிகரிக்க உதவ நிறுவப்படுகிறது.
முன்பு நடைபயணம் நிறுத்தப்பட்டது ஏன்?
மார்ச் 23-ம் தேதி ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) விண்வெளி வீரர் மத்தியாஸ் மௌரரின் ஹெல்மெட்டில் சிறிய அளவு தண்ணீர் காணப்பட்டது. மௌரரின் விண்வெளி நடைப்பயணத்திற்குப் பிறகு, விண்வெளி நிலையக் குழுவினர் உடனடியாக அவரது ஹெல்மெட்டைக் கழற்றி, நாசாவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து இப்பிரச்சனை குறித்த தரவுகளைச் சேகரித்தனர்.
தீவிரமாக ஆய்வு செய்து, மற்ற விண்வெளி நடைபயண திட்டங்களையும் நாசா நிறுத்துவதாக அறிவித்தது.
மௌரரின் ஸ்பேஸ் சூட் மற்றும் அதில் இருந்த நீரின் மாதிரிகள் நாசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாசா குழுக்கள் ஸ்பேஸ்சூட்டை கிழித்து விரிவான சோதனை செய்தனர். அதில் எவ்வாறு தண்ணீர் சென்றது என ஆய்வு செய்தனர். சோதனையின் முடிவில் வன்பொருள் செயலிழப்பு (Hardware failures) எனத் தெரிவித்தனர்.
நாசா கூறுகையில், ஸ்பேஸ் சூட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகப்படியான நீர், ஒருங்கிணைந்த சூட் சிஸ்டம்களின் பல அமைப்புகள் ஒரே நேரத்தில் பல வேலைகள் குளிரூட்டல் மற்றும் பிறவற்றை செய்யும் போது ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தது. மேலும், இதற்கு மாற்றாக புதிய வன்பொருளை உருவாக்கியப் பின் தற்போது நடைபயணத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil