அமெரிக்க அரசின் விண்வெளி நிறுவனமான நாசா அந்நாட்டின் 7 தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு பல்வேறு துறைகளில் உதவ உள்ளதாக அறிவித்துள்ளது. ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நார்த்ராப் க்ரம்மன் உள்ளிட்ட 7 அமெரிக்க தனியார் நிறுவனங்களுக்கு மனித விண்வெளிப் பயணம் மற்றும் குறைந்த பூமி சுற்றுப்பாதை விண்வெளி பயணங்களை மேம்படுத்துவதற்காக நாசா உதவ உள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
விண்வெளி நிலையங்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் விண்வெளி உற்பத்தி திறன்களை உருவாக்க நிபுணத்துவம், தொழில்நுட்பங்கள் மற்றும் பிற ஆதரவுகளை நாசா வழங்க உள்ளது.
வணிக விண்வெளி திறன்கள்-2 முன்முயற்சியின் மூலம், (CSC-2) விண்வெளி நிறுவனம் இந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம், மதிப்பீடுகள், தொழில்நுட்பங்கள், தரவு மற்றும் பலவற்றை வணிக விண்வெளி தொடர்பான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக வழங்குகிறது.
7 தனியார் நிறுவனங்கள்
ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆரிஜின், நார்த்ரோப் க்ரம்மன், வாஸ்ட், ஸ்பெஷல் ஏரோஸ்பேஸ் சர்வீசஸ், திங்க் ஆர்பிடல் ஆகிய நிறுவனங்களுக்கு நாசா உதவ உள்ளது.
ப்ளூ ஆரிஜின்
வாஷிங்டனை தளமாகக் கொண்ட ப்ளூ ஆரிஜின் ஜெஃப் பெசோஸால் ஒரு தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். CSC-2 இன் கீழ், நிறுவனம் வணிக விண்வெளி போக்குவரத்து திறனை மேம்படுத்த நாசாவுடன் இணைந்து செயல்படும். இது அதிக அதிர்வெண் கொண்ட குழுவினர் மற்றும் குழுமமற்ற பயணங்களை சுற்றுப்பாதைக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்ட்டெமிஸ் V பணியில் மனிதர்களை நிலவில் தறையிறக்கும் திட்டத்திற்கு க்யூமன் லேண்டிங் அமைப்பை உருவாக்க நாசா ப்ளூ ஆரிஜின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ்
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்பேஸ்எக்ஸ் அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கைப் போலவே அறிமுகம் தேவையில்லை. மிகவும் பிரபலமான தனியார் விண்வெளி நிறுவனமாகும். ஸ்பேஸ்எக்ஸ் அதன் ஸ்டார்ஷிப் ஏவுதள அமைப்பை உருவாக்குவதற்கும் அதன் டிராகன் விண்கல தளத்தை உருவாக்குவதற்கும் நாசாவின் உதவியைப் பெறுகிறது. ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தில் நாசா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“