/tamil-ie/media/media_files/uploads/2022/09/NASA-artemis-launch-september-27-20220913.jpg)
நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோதனை முயற்சியாக ஆளில்லா விண்கலம் மற்றும் ராக்கெட் ஏவும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் முறையாக விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட்டின் 4 என்ஜின்களில் 3ஆவது என்ஜின் செயலிழந்ததாக திட்டக்குழு தெரிவித்தது. இதையடுத்து ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
தொடர்ந்து 2-வது முயற்சியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் பணி மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 27ஆம் தேதி 3-வது முயற்சியாக நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
இந்த 3-வது முயற்சியின் போது அரபிடோப்சிஸ் தலியானா (தாலே கிரெஸ்) Arabidopsis thaliana (Thale cress) விதைகளை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள்
இதன் மூலம் விண்வெளியில் அமினோ அமிலங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள உதவும். விதைகளில் இருந்து வளரும் "விண்வெளி பயிர்கள்" ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நீண்டகாலம் விண்வெளியில் தங்கி ஆய்வு மேற்கொள்ள உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/life-beyond-earth1.jpg)
நாசா ஓரியன் விண்கலத்தில் Branched-chain amino acids (BCAAs) அமினோ அமிலங்களின் அளவுகளுடன் விதைகளை அனுப்பும். இந்த பிசிஏஏக்கள் செடிகள் மற்றும் விலங்குகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக உள்ளன. விண்வெளி சூழலில் விதைகளின் மீது ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கத்தை விஞ்ஞானிகள் அறிய உதவும். மனித உயிரணுக்கள் சில அமினோ அமிலங்களை ஒருங்கிணைக்க முடியும், ஆனால் பிசிஏஏக்கள் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நமது உணவின் மூலம் மட்டுமே பெற முடிகிறது எனக் கூறுகின்றனர். பிசிஏஏக்கள் செடிகளின் வளர்ச்சி மற்றும் மனித ஊட்டச்சத்து ஆகிய இரண்டிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
This research aboard #Artemis I could help researchers identify & develop nutritious space crops! Dr. Federica Brandizzi, who led this study, explains what studying plant seeds flown in deep space could mean for space exploration and life on Earth. https://t.co/PJE48dvy0T pic.twitter.com/H1yEzrBVOM
— NASA Space Science (@NASASpaceSci) September 14, 2022
நாசாவின் இந்த சோதனை முயற்சி விண்வெளி பயிர்கள் “Life Beyond Earth: Effect of Space Flight on Seeds with Improved Nutritional Value” வருங்காலத்தில் வீரர்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அடித்தளமாக இருக்கும். மேலும் தற்போது இந்த விண்வெளி பயிர்கள் முயற்சி வருங்காலத்தில் விண்வெளியில் தாவர வளர்ச்சி மற்றும் விதை எடுத்து செல்வதற்கான நடைமுறைகளை மேம்படுத்த உதவும் என அறியப்படுகிறது.
ஏன் தாலே கிரெஸ் விதைகள்?
விதைகள் முளைத்து வளரும் போது, நாற்றுகள் சூரிய ஒளியை அடையும் வரை மற்றும் தானானவே ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் வரை, அந்த விதைகள் முன்பே செயற்கையாக சேமித்து வைத்திருக்கும் ஊட்டச்சத்து இருப்புகளைப் பயன்படுத்துகின்றனர். விண்வெளி பயணத்தின் போது ஊட்டச்சத்து இருப்புக்களை வெளியேறும்.
பிசிஏஏக்கள் அதிக அளவு கொண்ட விதைகள் சூழலை சமாளித்து ஆரோக்கியமான பயிர்களை விளைவிக்க செய்யும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த வகையில் தாலே கிரெஸ் (அரபிடோப்சிஸ் தலியானா) விதைகள் இதற்கு ஏற்றதாக இருக்கும் எனக் கூறுகின்றனர். மேலும், இது நிறைய மாதிரி விதைகளை ஒரே கொள்கலனில் எடுத்துச் செல்ல முடிகிறது. விண்வெளிக்கு அனுப்புவதற்கு ஏற்றதாக உள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.