அங்கு இப்படிதான் இருக்குமா? செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள்: நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய அழகிய புகைப்படங்கள்
NASA shared a 'postcard image' of the red planet நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரெட் பிளானட்டின் காலை மற்றும் மதிய நேரங்களை அழகாக படம் பிடித்து அனுப்பியுள்ளது.
NASA shared a 'postcard image' of the red planet நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரெட் பிளானட்டின் காலை மற்றும் மதிய நேரங்களை அழகாக படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இந்த படம் கியூரியாசிட்டி ரோவர் மூலம் எடுக்கப்பட்ட இரண்டு கருப்பு மற்றும் வெள்ளை பனோரமாக்களின் வண்ணமயமான கலை விளக்கமாகும். (நாசா / ஜேபிஎல்)
கியூரியாசிட்டி மார்ஸ் ரோவர் (Curiosity Mars rover) மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் போஸ்ட் கார்டு படங்களை நாசா பகிர்ந்துள்ளது.
Advertisment
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) செவ்வாய் கிரகத்தின் "மார்க்கர் பேண்ட் பள்ளத்தாக்கு" என்ற பகுதியை கியூரியாசிட்டி ரோவர் படம் எடுத்ததை பகிர்ந்துள்ளது, இது சிவப்பு கிரகத்தில் ஒரே நாளின் இரண்டு பகுதிகளை சித்தரிக்கிறது. ஜேபிஎல் செவ்வாயன்று படத்தைப் பகிர்ந்துள்ளது.
The original non-colour version of the morning panorama captured by Curiosity. (NASA)
கியூரியாசிட்டியின் நேவிகேஷன் கேமராக்களால் இந்த படங்கள் எடுக்கப்பட்டது. இரண்டு கருப்பு மற்றும் வெள்ளை பனோரமாக படங்களை இணைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கியூரியாசிட்டி கருப்பு, வெள்ளை நிறத்தில் படம் எடுத்தது. இருப்பினும் புரிதலுக்காக விஞ்ஞானிகள் நிறங்களை சேர்த்துள்ளனர். காலையில் எடுக்கப்பட்ட பகுதிக்கு வானத்திற்கு நிறம் நீல நிறத்திலும், மதியம் எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த படத்தின் பகுதிக்கு சிவப்பு நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
The original non-colour version of the morning panorama captured by Curiosity. (NASA)
படத்தை எடுக்கும்போது, க்யூரியாசிட்டி ரோவர் மவுண்ட் ஷார்ப் மலையின் அடிவாரத்தில் இருந்தது. இது கேல் க்ரேட்டரில் 5 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளது. 2012 இல் தரையிறங்கியதிலிருந்து, ரோவர் இந்த பள்ளத்தை ஆராய்ந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“