நாசாவின் பெர்சிவரேன்ஸ் ரோவர் (Perseverance rover) செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வருகிறது. பல்வேறு தகவல்களை சேகரித்து அனுப்பி வரும் நிலையில், செவ்வாய் கிரகத்தில் நதி இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. மிகவும் ஆழம் கொண்ட பழமையான ஆறு இருந்துள்ளதாகவும் ஆதாரங்கள் வெளிபடுத்துகிறது.
ஜெஸெரோ க்ரேட்டரில் பாயும் நீர்வழிகளின் வலையமைப்பின் ஒரு பகுதியாக இந்த நதி இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. Perseverance இன் Mastcam-Z கருவி மூலம் எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான படங்களை ஒன்றாக இணைத்து படம் வெளியிடப்பட்டுள்ளது.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் முதுகலை ஆராய்ச்சியாளரான லிபி இவ்ஸ் கூறுகையில், இந்த பாறைகளை பார்க்கும் போது அங்கு வேகமாக செல்லக்கூடிய நதி இருந்திருக்கலாம் எனக் காட்டுகிறது. நீரின் ஓட்டம் எவ்வளவு சக்தி வாய்ந்ததோ, அவ்வளவு எளிதாக அது பெரிய பொருட்களை நகர்த்த முடியும். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“