உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் தொடர்ந்து மோசமாகி வருகிறது, இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகிறது. கிட்டத்திட்ட 2 ஆண்டுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு உலகம் மீண்டு வரும் நிலையில், விஞ்ஞானிகள் அடுத்த பொருந்தொற்று வெளவால்கள் அல்லது பறவைகளிடமிருந்து வராமல் , பனிப்பாறைகள் உருகுவதால் நிகழும் என்கின்றனர்.
காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை வேகமாக பாதிப்பது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். Proceedings of the Royal Society B: Biological Sciences என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின்போது மண்ணின் மரபணு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வைரஸ் கசிவு மற்றும் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வைரல் ஸ்பில்ஓவர் என்பது ஒரு புதிய ஹோஸ்டை எதிர்கொள்ளும் போது, ஒரு வைரஸ் அதைத் தாக்கி, இந்தப் புதிய ஹோஸ்டில் நிலையாகப் பரவும் ஒரு செயல்முறையாகும்.
பனிப்பாறைகள் உருகுவது குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில் பனிப்பாறைகளில் படிந்திருக்கும் (அடைபட்டிருக்கும்) வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நிரந்தரமாக உறையும் சூழல் ஏற்படலாம். இந்த வைரஸ்கள் வனவிலங்குகளைப் பாதிக்கும். விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும். கோவிட்-19 கொரோனா தொற்று நோய் போல், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உலகின் மிகப்பெரிய உயர் ஆர்க்டிக் நன்னீர் ஏரியான லேக் ஹசென் ஏரியிலிருந்து மண் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த மாதிரிகளில் ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏவை வரிசைப்படுத்தி ஆய்வு செய்ததில் வைரஸ்களின் தாக்கம் இருந்தது என கூறுகின்றனர். பனிப்பாறை உருகுவதன் மூலம் ஸ்பில்ஓவர் ஆபத்து அதிகரிக்கிறது என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டியது.
வைரஸ்கள் பூமியின் எல்லா இடங்களிலும் உள்ளன. அவை பெரும்பாலும் தனது உற்பத்தியை அதிகரிக்கிறது. அவை சுயமாக இயங்குவது இல்லை. சுயாதீனமான உயிரினங்கள் அல்ல. ஒரு வைரஸ் மற்றொன்ருடன் இணைந்து உற்பத்தியை பெருக்குகிறது.
குறிப்பாக உயர் ஆர்க்டிக் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மற்ற பகுதிகளை விட வேகமாக வெப்பமடைகிறது. புவி வெப்பமயமாதல், காலநிலை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் உலகளாவிய பாதிப்பு மற்றும் வைரஸ் கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம், என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, 15,000 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்திருந்த 33 வைரஸ்களைக் கண்டுபிடித்தனர், அவற்றில் 28 நோவல் வைரஸ்கள் ஆகும். புவி வெப்பமடைதல் காரணமாக உருகும் திபெத்திய பனிப்பாறையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“