Advertisment

பூமிக்கு அருகில் 30,000க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் கண்டுபிடிப்பு: பூமிக்கு ஆபத்து ஏற்படுத்துமா?

பூமிக்கு அருகில் 30,000க்கும் மேற்பட்ட சிறுகோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கியுள்ளளனர்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
பூமியை நோக்கி வேகமாக வரும் கிறிஸ்துமஸ் சிறுகோள்.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

பூமிக்கு அருகில் சிறுகோள்கள் ( Near-Earth Asteroid (NEA)) என 30,000க்கும் மேற்பட்ட சிறுகோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனுக்கும் நமது கிரகத்திற்கும் இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) கூற்றுப்படி, இதுவரை 30,000க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இவை பெரும்பாலும் கடந்த 10 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை என்று கூறுகிறது.

Advertisment

சூரிய குடும்பத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 1 மில்லியன் சிறுகோள்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுகோள்கள் என்இஏ( NEA)-வாக இருந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு இடையே உள்ள சிறுகோள் பெல்ட்டில் வாழ்கின்றன. 1801 ஆம் ஆண்டில் கியூசெப் பியாசி முதல் சிறுகோளை கண்டுபிடித்தார்.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கூறுகையில், சூரிய குடும்பத்தில் பூமிக்கு அருகில் என 30,039 சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.

மேலும் கூறுகையில், "எதிர்பார்த்தபடி, ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள்கள் மிகப்பெரியதாக இருந்தன. தொலைநோக்கி தொழில்நுட்பத்துடன் இன்னும் பலவற்றை மிக வேகமான விகிதத்தில் கண்டுபிடித்து வருகிறோம். சிறுகோள்கள் பல அடி மீட்டர் அளவுகளில் காணப்படுகின்றன.

த்து வருகிறோம், இந்த சிறுகோள்களில் சில பல்லாயிரக்கணக்கான மீட்டர் அளவுகளைக் கொண்டுள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.

நிலத்தில் இருந்து வானத்தின் பெரிய பகுதிகளை ஸ்கேன் செய்ய வடிவமைக்கப்பட்ட தொலைநோக்கிகள், ஒவ்வொரு வாரமும் புதிய சிறுகோள்களை கண்டுபிடித்து வருகின்றன. ஒரு சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. அதில், வானியலாளர்கள் சிறுகோளின் அளவு, பாதை ஆகியவற்றை கண்டுபிடிக்க உதவுகிறது.

இந்த சிறுகோள்கள் பூமியைத் தாக்குமா?

அதிர்ஷ்டவசமாக, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்கள் எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. குறைந்தபட்சம் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. சில சிறிய சிறுகோள்கள் நமது கிரகத்தை தாக்கினாலும் அவற்றால் எந்த பாதிப்பும் இல்லை.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான பெரிய சிறுகோள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன, இருப்பினும் அவை நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. 100 ஆண்டுகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாது. அப்படியே எதிர்காலத்தில் ஆபத்து நேரிட்டாலும் நாசாவின் DART போன்ற திட்டங்கள் இதற்கு உதவியாக இருக்கும். சிறுகோள்கள் நமது கிரகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும், அவற்றை திசை திருப்பும் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. அதனால் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment